பக்கம்:இராஜேந்திரன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 இராஜேந்திரன்

§

பூதிமதி ஸ்நேகலதா தேவி என்னும் பதினேந்து வய துள்ள ஒரு வங்காளப் பிராமணச் சிறுமி தன் விவாகச் செலவு, வரதகதின. இவைகளின் கி.மி த்தமாகத் தன் தந்தை தாம் குடியிருக்கும் வீட்டை அடமானம் வைக்கத் துணிந்ததை உணர்ந்தாள். அதற்காக விடியுமுன் எழுந்து சென்ற அவள் தந்தை, மாலே வெகு நேரம் கழித்து வந்த தால் தளர்ந்த கால்கள் கோவ, முகம் வியர்க்க, மெய் சோர வருத்தம் நெஞ்சடைக்க, நாவறட்சி கொள்ள, வீட்டிற்குத் திரும்பி உள்ளே பிரவேசிக்கும்போது, வீட்டை அடமானம் வைத்துவிட்டோமே என்ற துக்கத்தால் அவர், எல்லா மிழந்தோம்! என்று தமக்குள் சொன்ன சொல், ஸ்நேக லதா தேவியின இருதயத்தை ஊடுருவிப் பாய்ந்தது, அவள் மிகுந்த துயரத்தோடு தன் தந்தைக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுத் தனக்குத் தானே தீயிட் டுக்கொண்டு இறந்துபோனுள். என்ன கண்ணராவியிது! வரதrனே செய்யும் கோரமன்ருெ?

விஸ்தாராமன அக்கடிதத்தின் இரண்டொரு வாசகங் களேமட்டுமே அடியில் குறிப்பிட்டிருக்கிருேம். வரதகவிணே யின் கொடுமையால் விவாகத்திற்கு வழியின்றித் தற்கொலே

  • ஸ்நேகலதாதேவி 1914.ம் வருஷம் பிப்ரவரி மாதத்தில் வங்காளத்தில் தற்கொலை செய்துகொண்டாள். - 'கான் கால கதியடைந்த பிறகு எனது சாம்பலே நீங்கள் கண்ணிருதிர்த்துக் கரைப்பீரென்பது கிச்சயம். ஆனல் வீடு காப்பாற்றப்படும். இப்போது நான் மூட்டும் பெருந்தி தேச முழுமையும் தகிக்கட்டும். எனது அன்பார்ந்த பிதாவே! போய் வருகிறேன். கான் இப்பூவுலகத்திலிருந்து நீங்கும் காலம் நெருங்கிவிட்டது. -

- இப்படிக்கு தங்களுக்குத் துரதிருஷ்டப் பெண்ணுய் ஜனித்த

ஸ்நேகல்தா,’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/53&oldid=660433" இலிருந்து மீள்விக்கப்பட்டது