பக்கம்:இராஜேந்திரன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 இராஜேந்திரன்

ஒன்றே பாக்கி பர்த்தாவும் பத்தினியும் ஆர்வத்துடனும் காதலுடனும் பாஸ்பரம் சந்தித்துக்கொள்ள விரும்புகிற் இயற்கையாகிய விருப்பத்தில் தாய் தந்தையர்களாகிய பெற். ருேர்கள் குறுக்கிட்டு ஒருவர் முகத்தை ஒருவருக்குக் கா. டாமல் வைத்து வேதனேயை விளேவிப்பதைப்பற்றி அவன் பெரிய பெரிய எண்ணங்கள் நிறைந்தவனுன்ை. தான் முன் ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுத்ததால் அவள் இட்ட சாபமே தனக்கு அப்படி நேர்ந்தது என்று தன்னேயே நொந்துகொண்டான். அவன் பட்ட சஞ்சலத்தை இங்கே விவரிப்பது எவராலும் ஆகாது.

கடைசியாக எழுந்து நாற்காலியிற் போய் உட்கார்ந்து தரையை நோக்கியவாேற வெகு நேரம் யோசனேயில் ஆழ்ந் திருந்தான். பிறகு தலையை நிமிர்த்தி ஏதோ சிந்தன யோடும் ஒரு புறம் பார்க்கவே அவன் முன் ரீரங்கத்தில் கற்பழித்த பெண்ணின் உருவம் அப்படியே தத்ரூபம்ாய் அவன் எதிரில் நிற்பதாகத் தோன்றிற்று, தான் அவ மானப்பட்டு கிற்பதை நோக்கி அந்த ரூபம் தன்னைப் பரிக சிப்பதுபோன்ற தோற்றம் அவன் மனத்திற் பட்டு மிகுதி யும் வருந்தின்ை. பிறகு உன்னிப்பாய்ப் பார்க்கவே அவ் வுருவம் தான் கற்பழித்த பெண் அல்லவென்றும் சுவரில் மாட்டியிருக்கும் ஒரு படமென்றும் தெரிந்தது. அதை எடுத்துப் பார்க்கவே தனக்குத் தெரிந்த-தன்னுல் மான பங்க மடைந்த-பெண்ணின் உருவமாகவே அப்படம் இருந் தது. தன் துராகிருதமான விஷயத்தை அறிந்து தன் மனேவியே தன்சீனப் பரிகசிப்பதற்காக அப்படத்தை அங்கே வைத்திருக்கிருளென்று எண்ணினன். பிறகு அங்கே இருந்தவர்களே விசாரிக்கவே,அப்படம் ருக்மிணியின் படமென்றும் அப்படத்தில் இருக்கும் பெண்தான் அவன் மனைவியென்றும் தெரியலான்ை திடுக்கிட்டான். அந்தச் சமயத்தில் அவன் மனம் இருந்த நிலைமையைச் சொல்வது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/57&oldid=660437" இலிருந்து மீள்விக்கப்பட்டது