பக்கம்:இராஜேந்திரன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதrணேயின் அல்ங்கோல்ம் 59

கஷ்டம். தனியாக ஒரு புறம் சென்று தாரை தாரையாகக் கண்ணிர் வடித்தான். ருக்மிணியின் ருதுசாந்திக்காகப் பணம் கேட்ட பழைய விஷயமெல்லாம் அவன் ஞாபகத் திற்கு வந்தன. தனது பெற்ருேளின் கொடுமையை, பனத்தின் பேராசையை, செய்த அக்கிரமத்தை, கினேத்து கினைத்து அவர்களேச் சபித்தான். உமது மனைவியிடமும் வரதகழினை வாங்கினிரோவென்று தன்னை ருக்மிணி பூநீரங் கத்தில் கேட்டதை நினைத்துக்கொண்டு, சாந்திக்கல்யா னத்துக்காகப் பணம் பறித்த தனது பெற்றேர்கள், தன் விவாகத்தின் போதும் வசதகழினே வர்ங்க்ாமல் இருந்திருப் பார்களா, வாங்கியே இருப்பார்கள் என்று தனக்குள் சொல்லொனத் துக்கத்தை யடைந்தான்.

பின் அங்கே பல தபால் கடிதங்கள் ஒரு இரும்புக் கம்பியில் கோத்திருக்கக் கண்டு சாதாரணமாக அதைப் பார்க்கப்போகத் தனது தாயார் ருக்மிணியின் அன்னேக்கு எழுதியிருந்த கண்டிதமான கடிதம் அவன் கண்ணில் தென்பட்டது. அதை உடனே எடுத்து முற்றும் வாசித் தான். அதில் ருக்மிணி தனக்கு ஒரு கடிதம் எழுதி யிருந்ததாகவும் அக்கடிதத்திற்குப் பதிலாகத் தனது தாயார் ஆயிரம் ரூபாய் தராவிட்டால் சாந்தி முகூர்த்தம் நடத்தவே முடியாதென்றும் அதுவும் ஜல் தியாய்க் கொடா விட்டால் வேறு கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்யப்படு மென்றும் வெகு கண்டிப்பாய் வரைந்திருந்ததையும் கவனித் தான். ருக்மிணி காணுமற்போன துக்கம் ஒரு பக்கம் சகிக் கொணுத வேதனேயாயிருக்க, தன் பெற்ருேரால் குக்மிணி யின் தாய் தந்தையர் அடைந்த கஷ்டமும், அவளே மனம் ஒப்பி பூரீரங்கத்திற்கு அனுப்ப நேர்ந்த கண்ணாாவியும், யாவும் சேர்ந்து கினேக்க கினேக்க ராஜேந்திரன் நெஞ்சை அடைத்தன. பிறகு தனது மாமியாரை விசாரிக்க வர தகழினே ஐயாயிரம் வாங்கப்பட்ட விஷயமும் தெரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/58&oldid=660438" இலிருந்து மீள்விக்கப்பட்டது