பக்கம்:இராஜேந்திரன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதrதிணையின் அலங்கோல்ம்

படுகிறது. அது என்னவென்ருல் நமது மாப்பிள்ளே ராஜேந்திராசாரி அதிக புத்திமானென்றும் நல்லவ னென்றும் கேள்விப்படுவதால் எப்படியாவது வயிற்றைக் கட்டி, பத்து ருபாய் சயில் செலவுக்குச் சேகரித்துக் கொண்டு நேரில் போய்ப் பார்த்து நமது கஷ்டங்களேயெல் லாம் அவரிடம் சொல்லிக்கொண்டால், அவர் தம் தகப்ப ஞரிடம் பேசி ஒரு வழிக்குக் கொண்டுவருவாரென நினைக்கி றேன். இது ஒன்றுதான் நாம் செய்யக்கூடிய பிரயத்தனம். திருவேங்கடம்மாள்: பேஷ் பேஷ் இவ்விஷயத்தில் நான் இதுவரையில் பிரயத்தனம் செய்யவில்லையென்று கிச்சயித்துக்கொண்டிருக்கிறீர்போல் இருக்கிறது.நமக்குத் தெரியாமல் நமது குழந்தை தானே எழுதுவதுபோல் இல் விஷயங்களேயெல்லாம் குறிப்பிட்டு அவள் ஆம்படை யானுக்கு மூன்று கடிதங்கள் எழுதும்படி செய் தேன். அந்தப் புத்திசாலிப்பிள்ளே கடிதங்களே எல்லாம் வாங்கி, அவர் தாயாரிடம் கொடுத்தார். அவள் பிரமாத மாய்க் கோபித்து இதிலெல்லாம் ஜபம் சாயாதென்றும், முன் தீர்மானித்தபடி ரூபாய்கள் கொடுத்தாலொழிய சாந்திக்கல்யாணம் செய்யச் சாத்தியப்படாதென்றும், நமது பெண் சாக்திக்கல்யாணம் ஆகுமுன், மாப்பிள்க்ாக்குக் கடி தம் எழுதினதற்காக அவர் பிரமாதமாய்க் கோபித்துக் கொண்டாரென்றும் இனிமேல் கடிதம் எழுதினுல் நமது GL657డియో? ஒரு கற்புடைய பெண்ணுகப் பாவிக்க மாட்டா ரென்றும், அவர் எழுதும்படி சொன்னதாக அவள் எழுதி யிருக்கிருள். ஆகையால் இனி அவ்விஷயத்தில் பிரயத் தனம் செய்வது வியர்த்தமேயாகும்.

ராகவாசாரி : கமது குழந்தை ருக்மிணிக்கு அத்தனே சிறு வயதில் விவாகம் செய்யக்கூடாதென்று வற்புறுத்திச் சொன்ன வார்த்தையைக் கேட்காமல், நாம் ஒரே பிடிவாத மாய்க் கல்யாணஞ் செய்ய ஏற்பாடு செய்ததால் அன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/6&oldid=660386" இலிருந்து மீள்விக்கப்பட்டது