பக்கம்:இராஜேந்திரன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்திரனின் சத்திப்பு $7

இவ்விளம்பரத்தை ராகவன் பார்த்து ராஜேந்திர னிடம் காண்பித்தார். ராஜேந்திரன் தமது வழக்கம்போல் பாராமலே, சரிதான் பார்த்தாய்விட்டது என்று சொன் ஞர். ராகவன் மறுபடியும் ராஜேந்திரனேக் கட்டாயப்படுத் திப் பார்க்கச் சொன்னர். ராஜேந்திரன் படித்துப் பார்த்த தும் முகம் மலர்ந்தது. திசை வழி தெரியாமல் அநேக மாதங்களாய் நடுச் சமுத்திரத்தில் திண்டாடிக்கொன் டிருக்கும் ஒரு மாலுமிக்குத் திடீரென்று கரை தென்பட் டால் எவ்வளவு ஆனந்தம் உண்டாகுமோ அவ்வளவு ஆனந்தம் உண்டாயிற்று. தமது நண்பர் ராகவனே அழைத்துக்கொண்டு மோட்டார் வண்டி ஏறி உடனே பத்தி ரிகை ஆபீசுக்குப் போய் அந்த விளம்பரம் போட்டவர்கள் யாரென்று விசாரித்தார். ரங்கூன் மாண்ட்கோமரி தெரு 38-வது கதவிலக்கமுள்ள விட்டிலிருக்கும் சுந்தராசாரியின் பத்தினியாகிய வேதவல்லியம்மாள் எழுதியாகத் ெதரிக்தி தன் பேரில் அன்றே ரங்கூனுக்குப் போகும் கப்பலில் இரு வருமாகப் பிரயாணம் செய்து குறிப்பிட்ட விலாசத்தில் போய் விசாரித்தார்கள். அப்போது சுமார் 50-வயதுடைய வேத வல்லியம்மாளென்ற ஒரு கிழவி அங்கே அழுதுகொண் டிருப்பதாகத் தெரிந்து அவளேப் போய்ச் சமாதானப் படுத்தி, வேதவல்லியம்மாளென்பது தாங்கள்தாமா' என்று கேட்டார்கள். அந்தப் பேருடைய துர்ப்பாக்கியவதி தர்ன்தானென்றும், அந்த வயதில் புருஷனே இழந்து அவதிப்படும் சமயத்தில் தம்மைத் தொந்தரவு செய்பவர் கள் யாரென்றும் கேட்டாள். -

ராகவன். அம்மா! தாங்கள் சென்னைப் பத்திரிகை களில் பிரசுரம் செய்த விளம்பரத்தைக் கண்டு கடிதம் எழுதி ஞல் திருப்திகரமா யிருக்காதென்று விஷயம் தெரிந்து போவதற்காக நேரில் வந்தோம். தாங்கள் குறிப்பிட்ட தேதியில் ரீரங்கம் வந்த ராஜுவென்பவர் இதோ நிற்பவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/66&oldid=660446" இலிருந்து மீள்விக்கப்பட்டது