பக்கம்:இராஜேந்திரன்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்திரனின் சந்திப்பு 辍

உால் அவளேச் சேர்ந்த விஷயங்களேயும் சொல்லப் பிரார்த் திக்கிறேன். - வேதவல்லியம்மாள் தங்களேப் பார்த்தால் கல்லவர்க ளாய்த் தோன்றுகிறது. சொல்லவோ எனக்கு காவெழ வில்லை. சொல்லியும் தீரவேண்டியிருக்கிறது. தங்கள் சம் சாரம் இறந்து அநேக வருஷங்கள் ஆயின. -

உடனே ராஜேந்திரன் வேரற்ற மரம்போல் மூர்ச்சித் துக் கீழே விழுந்தார். ராகவன் தண்ணிர் கொண்டுவந்து முகத்தில் அடித்துச் சைத்தியோபசாரஞ் செய்ததில் சுமார் கால் மணி நேரத்திற்கு அப்பால் அவனுக்குப் பிரக்ஞை வந்து கண் விழித்துக் பார்த்ததும் புத்தி சுவாதினம் அடையவே தம் பெண்சாதியைப் பற்றிய விவரங்களே அறிய விரும்பி எழுந்து உட்கார்ந்து மனத்தைத் திடப்படுத் திக்கொண்டு சவிஸ்தாரமாய் எங்கே இறந்தாளென்றும் எப்படி இறந்தாளென்றும் சொல்லும்படி கேட்டார்.

வேதவல்லியம்மாள்: ஐயா, எனக்குத் தெரிந்தவரையில் வஞ்சனே இல்லாமல் சொல்லிவிடுகிறேன்...u அக்டோ பர் மீ 38வ புதன்கிழமை இரவு, நான் பிட்டாபூர் ஸ்டேஷன் வந்து ரெயிலுக்காகக் காத்திருந்தேன். அப்போது சுமார் 16 வயதுடைய ஒரு மாது அதிகமாய் மெலிந்து அடிமேல் அடி வைத்துக்கொண்டு இடுப்பில் சுமார் 30 நாள் வயது டைய ஒரு குழந்தையைச் சுமந்துகொண்டு ஒரு சிறு மூட்டையை வலது கையில் பிடித்துக்கொண்டு தனியாய் வந்து உட்கார்ந்தாள். அவளேப் பார்த்த மாத்திரத்தில் ஆபரணங்கள் ஒன்றும் அணிந்திராவிட்டாலும் அவள் நல்ல ஸ்திதியிலிருந்த பெண்ணென்றும், காலத்தின் கொடுமையால் அக்க திக்கு வந்தவளென்றும் கினேத்துக் கொண்டு அவள் தனியாய் வந்த காரணம் என்னவென்று கேட்டேன். தான் ஓர் அநாதையென்றும் தனக்குப் பந்துக் கள் யாரும் இல்லையென்றும் சொல்லிக் கண்ணிர் விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/68&oldid=660448" இலிருந்து மீள்விக்கப்பட்டது