பக்கம்:இராஜேந்திரன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்திரனின் சந்திப்பு 73

தாகச் சொன்னல் இதில் அடக்கம் செய்திருக்கும் கடி தத்தையும் குழந்தையையும் மற்றச் சாமான்களேயும் அவர் வசம் ஒப்பித்து விடவேண்டியது. அவர் கட் டாயமாய்த் தக்க பரிசளிப்பார்.

ருக்மிணி' காகிதத்தையும் தலைக்குட்டையையும் புடைவையை யும் கொடுத்துவிட்டு, குழந்தை இப்போது பெரியவகிை விட்டபடியால் வெளியே போயிருக்கிருன்; வந்தவுடன் அழைத்துப் போகலாம் என்று சொல்லிக்கொண் டிருந்த போதே, கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வடிய, மகனே உன்னேப் பிரியுங் காலமும் வந்துவிட்டதே' என்று ஓவென்று உரத்த குரலாய் அழ ஆரம்பித்துவிட்டாள்.

ராஜேந்திரனே அவளுடைய அழுகையையாவது விச னத்தையாவது கவனியாமல் கடிதத்தை வாங்கியதும் உறை யைக் கிழித்துக் கடிதத்தை எடுத்துப் பிரித்தார். கடிதத் திற்குள்ளிருந்து தாம். தம் ஞாபகார்த்தமாய் ருக்மிணிக்கு பூநீரங்கத்தில் அன்றிரவு கொடுத்த வைர மோதிரம் பொத் தென்று கீழே விழுந்தது. அம்மோதிரத்தைக் கவனி யாமல் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வடிந்து கொண்டே இருக்க அதனுள்ளிருந்த காகிதத்தை மும் முறை திரும்பத் திரும்ப வாசித்தார்.

க டி த ம் என் நாதா?

திக்கு நோக்கித் தியங்கி மயங்கித் தெரிவிக்கும் சிந்தைத் துயரம், என் பெற்ருேர்கட்குக் கண் போன மாதிரியும் தங்களுக்குக் கை போன மாதிரியும் செய்து விட்டு நான் இவ்வாறு அநாதையாகத் திரியக் காலம் வாய்த்தது. வாழ்வுக்கு முன் தாழ்வு கண்டேன். கஷ் டம் கஷ்டம்! என் வாணுளேப் பற்றி எப்போதும் அதிருப்தி உடையவளாகவே மாறிவிட்டேன். நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/72&oldid=660452" இலிருந்து மீள்விக்கப்பட்டது