பக்கம்:இராஜேந்திரன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்திரனின் சந்திப்பு 75

யில் இருந்திருந்து இன்ைெரு அன்னிய புருஷன் என்னே நீர் செய்தவாருக மானபங்கப்படுத்தியிருந்தால் அப்போது உமது மனம் எப்படி யிருந்திருக்கும்? என்று கேட்டபோது தாங்கள், உன் கேள்வி என் மனத்தைப் பிளக்கின்றது; ஆம் மிக்க அவதியடைந் திருப்பேன்; சாகவும் துணிந்திருப்பேன் என்று சொன்ன வார்த்தைகள் உடனே ஞாபகத்திற்கு வந் தன. நான் அன்று தங்களிடம் என்ன சொன்னே னென்பதைச் சற்றுக் கவனியுங்கள். இந்த விஷயத்தை என் பர்த்தா அறிந்துகொள்ளும்படி நானே செய்து விடுவேன். எனது சரீரம் கெட்டுவிட்டதே யன்றி என் பரிசுத்தமான ஆத்துமா கெடவில்லை. இந்த கி.மி ஷத்திலும் அது கிர்மலமாகவே யிருக்கின்றது. எனது பர்த்தாவை நான் சந்திக்கும்போது சகல சங்கதிகளே யும் கூறிவிடுவேன். அதன்மேல் அவர் என்னே ஏற் ஆறுக்கொள்ள மனது வைத்து இணங்குவாராகில் நான் ஏதோ ஜீவித்திருக்க முடியும்; அவரது அகமோ முகமோ கொஞ்சங் கோணிற்ருகில் நான் பிராணத்தியா கம் செய்து கொள்ளுவேன்; பகவான் அறியத் திரிகரண சுத்தியாக இது சத்தியம் என்று சொன்னேனல்லவா? தாங்கள், 'சாகவும் துணிந்திருப்பேன்’ என்று சொன்ன வார்த்தையிலிருந்தே தாங்கள் முழுமனத்துடன் என்னே அங்கீகரிக்க மாட்டிர்களென்று எனக்குத் தெரியும். ஆகையால் என் எண்ணத்தின்படி கான் இறக்க வேண்டியதே யொழிய இருக்க வேண்டியதில்லை. அதே கிமிஷத்திலேயே நான் தற்கொலை செய்து கொள்வதில்லையென்று தங்களுக்குச் செய்து கொடுத்த சத்தியத்தின் கட்டு நீங்கிவிட்டது. உடனே சாகத் துணிந்து வெளியேறிவிட்டேன். சற்றுத் தூரம் சென்றதும் நான் பூநீரங்கத்திலிருந்து வந்தபின் தேகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/74&oldid=660454" இலிருந்து மீள்விக்கப்பட்டது