பக்கம்:இராஜேந்திரன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8? இராஜேந்திரன்

லட்சத்துச் சில்லறை ரூபாய் வீண் விரையமாயிற்று. நன், ரவர்களே! தாங்கள் இதைப்பற்றி வருத்தப்படவேண்டாம். நான் கூடிய ஜல்தியில் இத்தொகைக்குச் சரியான ஈடு செய்து போடுகிறேன். நடந்துபோன விஷயத்தைப்பற்றித் தான் சிந்திக்க வேண்டும். இப்பெருந்தொகைகளே என் வாறு செலவு செய்திருக்கிருன் யார் யாருடன் நட்பாயிருக் கிருன். அவனேக் கெட்ட வழியில் திருப்பினவர் யாவர்? என்ற விஷயங்களேக் கவனித்தீர்களா? மேலும் இனிமேல் அவனேச் சீர்திருத்துவது எப்படி என்றும் சிந்திப்பதற்குத் தங்களுக்குப் போதிய சாவகாசம் இருப்பதால் அப்படிக் சிந்தித்தீர்களா என்றும் என்ன முடிவுக்கு வந்தீர்களென் ஆறும் தயவு செய்து தெரிவியுங்கள்.

ராகவன்: ஐயா! இவ்விஷயங்களேப் பற்றி நான் இரண் டரை வருஷ காலமாகச் சிந்தித்துக்கொண்டுதான் இருக்கி றேன். தாங்கள் வைத்த முதலிலிருந்தே வியாபாரம் பெருகி அவ்வியாபாரத்திலிருந்து வந்த லாபத்திலிருந்தே இந்தப் பதினறு லட்சத்துச் சில்லறை ரூபாயும் கொடுக்கப்பட் டிருக்கிறதே யொழிய வேறல்ல. அப்படியிருக்கத் தாங்கள் அந்தத் தொகையைத் திருப்பிக் கொடுத்துவிடுவதாகக் சொல்லுவது எனக்குச் சற்றும் பொருந்தவில்லை. அத் தொகையைத் திருப்பிப் பெற நான் ஒருபோதும் சம்மதி யேன். என்ன ஒரு பாகஸ்தன் என்பதாக கினேத்துப் பேசுவது என் நெஞ்சைப் பிளக்கின்றது. அது கூடாது. தாங்களே கான்; நானே தாங்கள்; பேதமில்லை.

ராஜேந்திரன்: நண்பரவர்களே சற்றுப் பொறுங்கள். கான் முதல் வைத்தேனே யொழிய தாங்கள்தான் வியர்வை சொட்டக் கஷ்டப்பட்டு வியாபாரத்தை விருத் திக்குக் கொண்டு வந்தீர்கள். எனது காரியஸ்தர் இதற்காகவே முன்பே, வரும் லாபத்தில் இருவரும் பேர்பாதி எடுத்துக் கொள்ள வேண்டுமென்று உடன்படிக்கைப் பத்திரம் (அக்ரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/81&oldid=660461" இலிருந்து மீள்விக்கப்பட்டது