பக்கம்:இராஜேந்திரன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசாரணே 35

சந்தேகப் படுவதாகவும் இன்னும் இதைப்போலொத்த அசங் இதமான வார்த்தைகள் பேசுவதாகவும் சொன்னன். அவரை உடனே அழைத்து வரச் சொல்லி அவர் உள்ளே வந்ததும் ராஜேந்திரன் அவரை உட்காரச் சொல்லாமல் கின்றபடியே பின்வருமாறு கேட்டார்.

ராஜேந்திரன்: ஐயா! தாங்கள் யார்? என்ன அவசரி ஜோலியாய் இங்கு வந்தீர்கள் தயவுசெய்து சொல்லுங்கள். வந்தவர்: ஐயா! நான்தான் கோபாலாசாரியார் அண்டு சன்ஸ் பாகஸ்தன் நான் பூரீமான் கனம் கோபாசாலாரியார் அவர்கள் புத்திரனுகிய கிருஷ்ணமாசாரி: இன்றைத்தினம் ஐந்து லட்சம் ரூபாய்கள் பத்தரை மணிக்கு நாங்கள் எங்கள் கணக்கில் வாங்குவதாக முன் கூட்டித் தெரிவித்திருக்கி ருேம். அத்தொகையைப் பெறவே இதோ இந்த உண்டி யலுடன் வந்தேன். தொகையை இந்த கிமிஷமே கொடுங் கள்! நான் அவசரமாகப் போகவேண்டும்.

ராஜேந்திரன்: ஐயா! தங்களுக்குக் கொடுப்பதற்காகவே நேற்று ஐந்து லட்ச ரூபாய் தயார் செய்து வைத்திருந்தோம். கிருஷ்ணமாசாரி: வைத்திருந்தோம்' என்ருல் என்ன? இப்போது ரூபாய்கள் இல்லையா? -

ராஜேந்திரன்: அவசரப்படாதேயுங்கள். தங்களுக்காக இரும்புப் பெட்டியில் தயாராய் வைத்திருந்த ஐந்து லட்ச குபாய் கோட்டுகள், பூட்டுகளெல்லாம் சரிவரப் பூட்டப்பட் டிருக்கும்போது ஆச்சரியமாய்க் காணுமற் போய்விட்டன.

கிருஷ்ணமாசாரி: பேஷ் பேஷ்! பேஷ்!! வெகு கம்பிக் கையுள்ள பாங்கி!!! எங்கள் தகப்பனர் சொன்னதே சரியா யிற்று. நான் வரும்போதே, பணத்துடன் வரப்போகி. ருயோ, வெறுங்கையாய் வரப்போகிருயோ என்று சந்தேகப் படுகிறேன். ருக்மிணி பாங்கி கூடிய ஜல்தியில் திவாலி எடுக்கும்’ என்று சொன்னது உண்மையாய் விட்டது! எங் களுக்குக் கொடுக்கவேண்டிய ஐந்து லட்சம் ரூபாயை மோசம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/94&oldid=660474" இலிருந்து மீள்விக்கப்பட்டது