பக்கம்:இராஜேந்திரன்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசாரணை 97

யின் வழியாய்த் தெருவில் எறிந்துவிடுவதற்காகத் தூக்கிக் கொண்டான். கிருஷ்ணமாசாரி கதறுவதானர். உடனே ராஜேந்திரன், அவரைக் கீழே விட்டுவிட்டு இப்படி வா! என்ன பரம தடியயிைருக்கிருயே! செக் புஸ்தகம் வாங்கி வரக் கூப்பிட்டால் வந்ததும் அவரைப் பிடித்து மேலே தூக்கிவிட்டாயே' என்ருர்.

சேவகன் தன் எண்ண்ம் நிறைவேருததைப்பற்றி அதிக வருத்தத்துடன் அவரை விட்டுவிட்டுச் செக் புஸ்த கம் வாங்கப் போன்ை. அப்போது ராகவன் ராஜேந்திர னிடம் மதராஸ் பாங்கியில் முன்னலேயே அதிகப் பணம் வாங்கியிருப்பதாகவும் ஆகையால் செக் அனுப்பினுல் அங் இகரிக்கப்பட மாட்டாதென்றும் மெதுவாய்ச் சொன்னுர். கிருஷ்ணமாசாரியார் அதைக் கேட்டுக்கொண்டு கேவல மாய்ப் பேச வாயெடுத்தார். அதற்குள் சேவகன் அவர் பக்கம் திரும்பினதும் மெளனமாக இருந்துவிட்டார். உடனே ராஜேந்திரன் தமது சொந்தச் செக் புஸ்தகத்தை எடுத்து ஒரு செக் எழுதி ரங்கநாத்திடம் கொடுத்து, "கிருஷ்ணமா சாரியை அழைத்துக்கொண்டு உடனே மதராஸ் பாங்கிக் குப் போய்,பணம் வாங்கித் தட்சணமே அவரிடம் கொடுத்து விட்டு வா’ என்று கூறிப் போகச் சொன்னர். அப்போது கிருஷ்ணமாசாரி தாம் அவசரப்பட்டு மதியீனமாகப் பேசிய தற்காக மன்னிக்க வேண்டுமென்றும் ராஜேந்திரனின் பெருந்தன்மை தமக்குச் சரிவரத் தெரியாதென்றும் இன் னும் இதைப் போலொத்த உபசார வார்த்தைகள் பேச வாயெடுத்தார். ராஜேந்திரனே அவரைப் பேசவிடாமல் வாயடக்கியதோடு, இனிப்பேசில்ை கட்டாயமாய் என் சேவ கனே அழைத்து...'என்ஆறு வாக்கியத்தைப் பூர்த்தி செய்ய, முன் தட்டட்டியின் வ | ய ய் மெத்தை மேலி ருந்து தள்ளப்படுவது இஷ்டமில்லை யாதலால் கிருஷ்ண மாசாரி படிகளின் வழியாய்த் துரிதமாய் இறங்கிப் போய்

இ-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/96&oldid=660476" இலிருந்து மீள்விக்கப்பட்டது