பக்கம்:இராஜேந்திரன்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ இராஜேந்திரன்

விட்டார். தெருவில் சென்றதும் ராஜேந்திரனுடைய வண்டி யில் அவர் சொன்னபடியே ரங்கநாத், கிருஷ்ணமாசாரியை அழைத்துக்கொண்டு மதராஸ் பாங்கிக்குப் போகப் போனுர், அப்போது வழியில்,

கிருஷ்ணமாசாரி: ஐயா! உங்கள் பாங்கியில் ஐந்து லட் சம் ரூபாய் திருட்டுப் போனதாக வேலைக்காரர்கள் கிசுகிசு வென்று பேசிக்கொள்ளுகிருர்களே! அது உண்மைதானு? ரங்கநாத்: எனது எஜமானர் ராஜேந்திரன் தங்களிடம் நேரில் சொல்லியும் தாங்கள் ஏன் சந்தேகப்படுகிறீர்கள்?

கிருஷ்ணமாசாரி: சந்தேகமில்லை. பாங்கிகளில் பலவித மாய் ஏமாற்றல்கள் நடக்கிறதுண்டே, அப்படி ஏதாவது இருக்குமோ என்னமோவென்றுதான் சந்தேகம்.

ரங்கநாத். எங்கள் எஜமானருடைய குணம் உமக்கு நன்ருய்த் தெரியாதாதலால் நீர் அப்படிப் பேசுகிறீர் அவரைவிடச் சிறந்த கனவான் இச் சென்னேயிலேயே கிடையாது. -

கிருஷ்ணமாசாரி: இப்போது ருக்மிணி பாங்கியில் பணக் கஷ்டம் அதிகம் என்று பிரஸ்தாபம். உமக்குச் சகல விஷ பங்களும் நன்ருய்த் தெரியுமே; அது உண்மையா பொய்யா? ரங்கநாத்: நீர் என்னேயும் உமது ஸ்தானத்தில் வைத்து இக் கேள்விகளேக் கேட்டீர். நான் உம்மைப்போல் துார்த்தனுயிருந்தால் பாங்கியின் ரகசியங்களே வெளியிற் கொட்டி விடுவேன். அதற்கு நான் ஆள் அல்ல. ஆல்ை ஒன்றுமட்டும் சொல்லுகிறேன். இன்றைத் தினம் கூடச் சென்னேயிலிருக்கும் பாங்கிகளில் மதராஸ் பாங்கிக்கு இரண் டாவதாக ருக்மிணி பாங்கியைத்தான் மதிக்கலாம்.

கிருஷ்ணம்ாசாரி: ஆம் ஆம் நீர் அவர்கள் உப்பைத் தின்றுவிட்டு இவ்வளவாவ து சொல்லாவிட்டால் நன்ரு யிருக்குமா? எனக்கு ஊர் மர்மங்களெல்லாம் தெரியும். இப் படிச் சொன்னல் பழையபடி நாங்கள் ரூபாய்களே உங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/97&oldid=660477" இலிருந்து மீள்விக்கப்பட்டது