பக்கம்:இராஜேந்திரன்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசாரணே 99

பாங்கியில் போடுவோமென்று நினைத்து அப்படிப் பேசுகி நீர்போல் இருக்கிறது. சரிதானேயா சரிதர்ன், இப்போது விளங்குகிறது.

ரங்கநாத்: ஐயா எப்படியாவது கினேத்துக்கொள்ளுங் கள். எங்களுக்கு அதைப்பற்றிய கவலையில்லே. உமக்கு ஒரு விஷயம் சொல்லுகிறேன். இனிமேல் நீர் எங்கள் பாங்கி யில் கால் வையாதேயும். ஏனெனில் உமது பேரில் இருக்கப் பட்ட கோபத்திற்குக் கட்டாயமாய் ராஜேந்திரன் உம்மைக் குதிரைச் சவுக்கால் அடிப்பார். -

கிருஷ்ணமாசாரி: இப்போது இந்தச் செக்கை நான் இருப்பிக் கொண்டுபோய்க் கொடுத்து உங்கள் பாங்கியி லேயே பணம் இருக்கட்டும் என்று சொன்னுல்கூடவா அப்படிச் செய்வார்.

ரங்கநாத் நீர் மட்டும் அப்படிச் செய்து பாரும்; நான் சொன்னபடி உமக்கு மரியாதைகள் கடக்காவிட்டால் உமது காலில் இருக்கும் செருப்பால் அடிபட நான் சம்மதிக் கிறேன்.

கிருஷ்ணமாசாரி சரி, என் பணத்தை அங்கே போட உத்தேசமில்லை. ஆகையால் அந்தப் பேச்சை விட்டுத் தள்ளும். நான் அங்கே வந்தபோது, இருந்த காரியங்களே யெல்லாம் கவனித்தால் குற்றம் உமது பேரில்தான் ஏற்படு மென்று எல்லாரும் பேசிக்கொண்டார்களே, உண்மை தான? -

ரங்கநாத்: நான் கிரபராதி. யார் என்ன கினேத்தாலும் எனக்கு அவசியமில்லை. மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம்; குற்றம் உள்ள நெஞ்சல்லவோ குறு குறு என்னும்.

கிருஷ்ணமாசாரி நண்பரே! நான் சொல்வதை கிதான மாகக் கேளும். நீர் குற்றவாளியோ அல்லவோ, அதை யெல்லாம் யாரும் கவனிக்க மாட்டார்கள். எப்படியாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/98&oldid=660478" இலிருந்து மீள்விக்கப்பட்டது