பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

109

"அதற்குள் என் கவலைகளே என்னைக் கொன்று தின்றுவிடும் போலிருக்கிறது மகாராணி!"

"நீ கவலைப்பட்டுக் கண்ணீர் சிந்துவதால் போனவன் திரும்பி வந்துவிடப்போவதில்லை பெண்ணே போனவனுக்குக் கவலைப்பட்டு உருகுவதைவிட வந்து பிறந்திருப்பவனுக்காக மகிழ்ச்சிப்படுவதற்குப் பழகிக்கொள் அம்மா!"

"எவ்வளவோ முயன்றும் என்னால் அது முடியவில்லை, மகாராணி என்னை மன்னித்து விடுங்கள்."

"உன் மகனின் பச்சிளம் முகத்தைப் பார்! உனது கவலைகள் தானே பறந்துபோகும்."

சின்னமுத்தம்மாள் இதற்கு மறுமொழி கூறவில்லை. அவளுக்குக் குழந்தை பிறந்த இரண்டாம் நாளும் இதே நிலையில்தான் இருந்தாள். மூன்றாம்நாள் சரியாகிவிடும் என்று ராணி மங்கம்மாள் நினைத்தாள். மூன்றாம் நாளும் சின்ன முத்தம்மாளிடம் எந்த உற்சாகமான மாறுதலும் நிகழவில்லை.


13. கண்கலங்கி நின்றாள்

ருமகளான சின்ன முத்தம்மாளின் உற்சாகமற்ற போக்கு ராணி மங்கம்மாளுக்குக் கவலையளித்தது. அவள் மனம் குழம்பித் திகைப்பு அடைந்தாள். கணவனை இழந்த துயரத்தை மகன் பிறந்த மகிழ்ச்சியில் மறந்து விடுவாள் என்று எதிர்பார்த்தது வீணாயிற்று.

சின்ன முத்தம்மாளை எப்படி மனம் மாறச் செய்வது என்று ஓயாமல் சிந்தித்தாள் ராணி மங்கம்மாள். அவளது எந்த முயற்சியாலும் மருமகளை மாற்ற முடியவில்லை. மருமகள் தைரியமாகவும் உற்சாகமாகவும் இராவிடில் பிறந்த குழந்தையை