பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

ராணி மங்கம்மாள்

நாதனுக்கு முடிசூட்டிய தினத்தன்று இரவில் ராணி மங்கம்மாள் ஒரு சொப்பனம் கண்டாள். அந்தச் சொப்பனம் அவளைச் சிறிது குழப்பமுறச் செய்தது என்றாலும் மனம் தளர்ந்துவிடாமல் உறுதியாக இருந்தாள் அவள்.

அரண்மனையில் எப்போதும் அவளுக்குத் துணையாக இருக்கும் 'அலர்மேலம்மா' என்ற வயது மூத்த தாதிப்பெண் வந்து எழுப்பிய பின்புதான் சொப்பனம் கண்டு அலறியபடி தான் கட்டிலிலிருந்து கீழே விழ இருந்ததே அவளுக்குத் தெரிந்திருந்தது. சொப்பனத்தில் ராணி மங்கம்மாள் போட்ட கூப்பாடு பயங்கரமாயிருந்ததால் துணைக்காக அதே அறையில் படுத்திருந்த 'அலர்மேலம்மா' விழித்தெழுந்து ராணியை எழுப்பி,

"என்னம்மா இது? எதற்காக இப்படிப் பயங்கரமாக அலறுகிறீர்கள்? கெட்ட சொப்பனம் ஏதாவது கண்டீர்களா? முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவிவிட்டு ஒரு குவளை தண்ணீர் பருகிய பிறகு தூங்குங்கள் மறுபடி துர்ச் சொப்பனம் எதுவும் வராது" என்று கூறினாள்.

எழுந்து முகம் கழுவிக் கொண்டு நீர் பருகிவிட்டு வந்தாலும் கண்ட கனவை எண்ணியபோது மறுபடி உறக்கமே வரவில்லை. நேரம் நள்ளிரவு கடந்துபோய் விடிவதற்கு இன்னும் சில நாழிகைகளே இருந்ததாலும் தூக்கம் அறவே கலைந்து போய்விட்டதாலும் அவள் மேற்கொண்டு உறங்க முயலவும் இல்லை.

விடிவதற்குச் சில நாழிகைகளுக்கு முன் கானும் கனவு பலிக்காமல் போகாது என்ற நெடுநாளைய நம்பிக்கை வேறு ராணிமங்கமாளின் மனத்தை மருட்டியது.

கனவை நினைத்தாள் அங்கே அதே பள்ளியறையில் அலர்மேலம்மாளுக்கு அருகே தொட்டிலில் நிம்மதியாக உறங்கும் குழந்தை விஜயரங்கனைப் பார்த்தாள். கனவை நம்புவதா, குழந்தையின் கள்ளங்கபடமில்லாத முகத்தை நம்புவதா என்று அவளுக்குப் புரியவில்லை. மனம் பலவாறாக எண்ணியது. கலங்கும்