பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

ராணி மங்கம்மாள்

அப்போது தன் செவிகள் கேட்டுக்கொண்டிருப்பது மெய்யா பொய்யா என்று முடிவு செய்துகொள்வதற்கே சில விநாடிகள் ஆயின ராணி மங்கம்மாளுக்கு.


28. மங்கம்மாள் சிறைப்பட்டாள்

விஜயரங்கனை அரண்மனையிலிருந்து தப்பவிட்டுவிட்ட காவலாளிளைச் சீறினாள் ராணி மங்கம்மாள். அவர்கள் களைத்துப் போய் உறங்கி விட்ட பிறகு இரவின் பின்யாமத்தில் தான் அவன் சுலபமாக நூலேனி மூலம் வெளியேறித் தப்பியிருக்கமுடியும் என்று அவளுக்குத் தோன்றியது. தப்பிச் சென்றுவிட்ட பேரனைப் பற்றிக் கவலையாகவும் இருந்தது. கோபமாகவும் இருந்தது.

தன் வயதுக்கு மீறிய காரியங்களில் அவன் ஈடுபடுவதாக அவள் எண்ணினாள். இந்த வயதில் இத்தனை தீவிரம் அவனுக்கு எப்படி உண்டாகியிருக்க முடியுமென்று அவளால் கற்பனை செய்யக்கூட முடியாமல் இருந்தது. அவனை நல்வழிக்குக் கொண்டுவர முடியும் என்கிற நம்பிக்கை இப்போது அவளுக்கு அறவே இல்லை.

அரண்மனை வீரர்களை அழைத்து, "எங்கே தப்பிச் சென்றிருந்தாலும் விஜயனைத் தேடிப் பிடித்து வாருங்கள் அவன் உடலுக்கோ உயிருக்கோ சேதமும் ஆபத்தும் இன்றி அழைத்து வாருங்கள் மற்றவற்றை அப்புறம் நான் பார்த்துக் கொள்கிறேன்"- என்று மங்கம்மாள் கட்டளையிட்டாள்.

தப்பிச் சென்றுவிட்ட விஜயரங்கனோ யாரும் அறியமுடியாத ஒதுக்குப்புறமான மறைவிடம் ஒன்றில் போய்த்தங்கிக் கொண்டு தன்