பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

ராணி மங்கம்மாள்

ஊழியராக நியமனம் பெற்று மதுரைக்கு வந்த விசுவநாத நாயக்கரின் வழித்தோன்றல்களில் ஒருவர். நேரடியான அரசவம்சமில்லை. இந்த அந்தஸ்துப் பிரச்சனை சொக்கநாத நாயக்கரையே உறுத்தியது; இதே அந்தஸ்தை மனதில் கொண்டு ரங்ககிருஷ்ணனுக்கு எந்த அந்தஸ்துமில்லாமல் சிறு வயதிலிருந்தே அரண்மனையில் வளர்ந்துவரும் முத்தம்மாளை மணமுடிக்கத் தயங்குவார்களோ என்ற சந்தேகம் சகலருக்கும் இருந்தது.

தாங்கள் உயர்ந்த ராஜவம்சம் என்று மற்றவர்களுக்கு நிரூபித்துக் காட்டுவதற்காகவே ராஜபரம்பரையில் மங்கம்மாள் தன் மருமகளைத் தேடக்கூடும் என்ற எண்ணம் அரண்மனை வட்டாரத்தில் பரவலாக நிலவியது. ஆனால் ரங்ககிருஷ்ணனோ தன் ஆருயிர்க் காதலி பேரழகி முத்தம்மாளுக்கு வாக்குக் கொடுத்திருந்தான். “மணந்தால் உன்னை மட்டுமே மணப்பேன். உடலாலும் உள்ளத்தாலும் உன் ஒருத்திக்கு மட்டுமே நாயகனாக இருப்பேன்.”

இப்படி அவன் வாக்களித்தபோது முத்தம்மாள் அவனிடம் ஞாபகமாக ஒன்றைக் கேட்டிருந்தாள்.

“உங்கள் அரசவம்சத்தில் ஒவ்வோர் இளவரசரும் குறைந்தது இருநூறு பெண்களுக்காவது வாக்களித்திருக்கிறார்கள். இருநூறு பேரையும் அந்தப்புரத்தில் ஆசை நாயகிகளாக வைத்துக்கொண்டு அந்த வாக்கைக் காப்பாற்றி விட்டு அப்புறம் ஒரு பட்டத்து அரசியையும் மாலையிட்டு மணந்திருக்கிறார்கள். நீங்களும் அப்படி ஒரு வாக்குறுதியைத்தானே எனக்கு அளிக்கிறீர்கள்? அப்படி வாக்குறுதிக்கும் நீர்மேலெழுதிய எழுத்துக்கும் என்ன வித்தியாசம்?”

“இல்லை முத்தம்மா! எங்கள் வம்சத்திற்கே இது விஷயத்தில் நான் முன்னுதாரணமாக இருப்பேன். எனக்குப் பட்டத்தரசி, ஆசை நாயகி எல்லாமுமாக நீ ஒருத்திதான் இருப்பாய்” என்று அப்போது அவன் அவளுக்கு உறுதி கூறி வாக்களித்திருந்தான்.

ஆனால் மகாராணியும் அமைச்சர்கள் பிரதானிகள் ஆகியோரும் மூத்தவர்களும் பட்டத்தரசி விஷயமாக முடிவு செய்யும்போது அரசியல் காரியங்களைக் கொண்டு முடிவு