பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

ராணி மங்கம்மாள்

"அது அக்கிரமம் ஐயா பாதுஷாவின் பழைய செருப்பைக் கும்பிடும்படி நம்மை வற்புறுத்தியவர்களுக்கும் குமாரப்ப பிள்ளைக்கும் என்ன வேறுபாடு?"

"நாகரிகமடைந்த நல்லவர்களுக்குத்தான் உன் கேள்வியும் அதன் நியாயமும் புரியம். துவேஷமும் வெறுப்பும் குரோதமும் நிரம்பியவர்களுக்கு நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாது முத்துவீரப்பா."

"போர்ச்சுகல் நாட்டிலிருந்து வந்த ஜான் டிபிட்டோ பாதிரியாரைத் தடுத்து மறவர் நாட்டு எல்லைக்குள் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்ப முயன்றால், தோலை உரித்து மரத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டுவிடப் போவதாகப் பயமுறுத்துகிற அளவு கிழவன் சேதுபதி கடுமையானவராயிருந்திருக்கிறார் என்றுகூடக் கேள்விப்பட்டிருக்கிறேன் ஐயா!"

"சிலரைத் தோலை உரித்துத் தலைகீழாக மரங்களில் கட்டித் தொங்க விட்ட கொடுமையும் நடந்திருக்கிறது முத்துவீரப்பா'

"கேட்பதற்கே அருவருப்பாயிருக்கிறது ஐயா குமாரப் பிள்ளை நம் அரண்மனையிலிருந்து சேதுபதிக்கு உதவியாக அனுப்பப்பட்டவர். அவரைக்கொன்றதே தாங்கமுடியாத கொடுமை, அவர் குடும்பத்தினரையும் கொன்றது பயங்கரமான பாவம். கிறிஸ்தவப் பாதிரிமார்களைத் துன்புறுத்துவது பொறுத்துக் கொள்ள இயலாதது. நாம் எப்படியும் அவரை அடக்கியே ஆகவேண்டும்."

"ஒரு விநாடிகூடக் காலந்தாழ்த்தக் கூடாது மகனே! பாதுஷாவுக்காகத் திருச்சியில் கூட்டிய படை வீரர்களோடு உடனே மறவர் சீமையின்மீது போர் தொடுத்தாக வேண்டும். தனது தூதரைக் கொல்லும் அந்நிய அரசனைப் படையெடுத்துத் தாக்கும் நியாயம் ஒவ்வொரு நல்ல அரசனுக்கும் உண்டு அப்பா! குமாரப்ப பிள்ளை நம்மால் அங்கு அனுப்பப்பட்டவர். அவரைப்பூண்டோடு அழித்தது நம்மை அவமானப்படுத்தியது போல்தான் நீ உடனே போருக்கு