பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

ராணி மங்கம்மாள்

விசுவாசமாக இருப்பதா? நமது மதிப்பிற்குரிய சேதுபதிக்கு எதிராக நாமே ஆயுதம் ஏந்தும் நிலையை இந்தப் போர் உண்டாக்கிவிட்டது அண்ணே"

"சேதுபதிகள் இராமபிரானுக்கே தோழனாக இருந்த குகனின் வம்சம். தெய்வாம்சம் பொருந்தியவர்கள். நம்மைப்போல் மற்ற மறவர்கள் கைகூப்பித் தொழ வேண்டிய நிலையிலிருப்பவர் இரகுநாத சேதுபதி. அவருக்கு எதிராக நின்று போர் புரிவதில் மனப்பூர்வமான ஈடுபாடு நம்மைப் போன்ற ஜாதிமறவர்களுக்கு இருக்க முடியாது. கூடாது. வேண்டுமானால் உண்ட உணவுக்குச் செஞ்சோற்றுக் கடன் கழிக்கலாம்."

"ஆமாம்! நீ சொல்வதுதான் சரி அண்ணே! அரசர்கள் இன்றைக்குச் சண்டை போட்டுக் கொள்வார்கள். நாளைக்கு ஒன்று சேர்ந்து விடுவார்கள். அதற்காக நாம் ஏன் நடுவில் ஜாதி அபிமானத்தைக் கெடுத்துக் கொண்டு குலத்தை வேரறுக்கும் கோடரிக் காம்புகளாகத் தலை எடுக்க வேண்டும்?"

"சேதுபதியை எதிரே பார்த்தாலே எனக்குக் கை நடுக்கம் வந்துவிடும் அண்ணே! வாளைக் கீழே போட்டுவிட்டு நெடுஞ்சாண் கிடையாக வணங்கத் தோன்றுகிற மனிதருக்கு எதிராக எப்படி அண்ணே நான் துணிந்து வாளை ஓங்க முடியும்?"

"அது தான் முதலிலேயே சொன்னேனே? நமக்கு இது ஒரு தர்மசங்கடமான போர் அண்ணே!"

"இன்றைக்குச் சேதுபதிக்கு எதிராக வாளை உயர்த்தி விட்டு நாளைக்குப் போர் முடிந்ததும் மானாமதுரைக்கோ மங்கலத்துக்கோ போய் நின்றால் சுயஜாதிக்காரன் நம்மை முகத்திலே காறித் துப்புவான்."

"துப்புறதாவது?...நம்மைக் கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை."

"இன்றைக்குச் சண்டை வரும். போகும். ஜாதிக் கட்டுப்பாடு நமக்கு என்றைக்கும் வேணும் பாட்டையா எங்கள் ஊர் எல்லையிலே