பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

83

படையெடுப்புகள் -அந்நிய ஆக்கிரமிப்புகளுக்குப் பயந்து இந்நகரிலிருந்த கிறிஸ்தவர்கள் சிலர் தங்கள் வீடு வாசல் நிலங்கரைகளை அப்படி அப்படியே விட்டுவிட்டு வேறு இடங்களுக்குக் குடிபெயர நேர்ந்தது. மறுபடி திரிசிரபுரத்தில் அமைதி ஏற்பட்டு அவர்கள் எல்லாரும் திரும்பிவந்து பார்த்தபோது அவர்களுடைய நிலங்களில் சில பகுதிகளில் இந்துக்கள் கோயில்களைக் கட்டித் திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கிருப்பது தெரிந்தது. எவ்வளவோ முயன்றும் கிறிஸ்தவர்கள் தங்கள் நிலங்கரைகளைத் திரும்ப அடைய முடியவில்லை. திரிசிரபுரத்துக்குத் திரும்ப வந்த கிறிஸ்தவ மக்கள் நியாயம் கிடைக்காமல் அநாதைகளாக நடுத்தெருவில் நிற்க நேர்ந்திருக்கிறது."

"நீங்கள் சொல்லுவதற்கு என்ன ஆதாரம் பாதிரியாரே?"

"எழுத்துப் பூர்வமான ஆதாரங்களும் இருக்கின்றன. தாங்களே விரும்பினாலும் நேரில் வந்து காணலாம் அரசே அழைத்துச் செல்லத் தயாராயிருக்கிறேன்."

"நீங்கள் சொல்கிறபடி இருந்தால் கட்டாயம் விசாரித்து நியாயம் வழங்கப்படும்."

"தங்கள் வாக்குறுதி எனக்கு நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது அரசே!"

"ஒருவருக்குரிய உடைமையை இன்னொருவர் ஆக்கிரமித்துச் சொந்தங் கொண்டாடுவது முறையில்லை. முறைகேடு எங்கே யாரால் நடந்திருந்தாலும் விசாரித்து நீதி வழங்குவேன் பாதிரியாரே!"

பாதிரியாருடைய முகத்தில் மலர்ச்சியும் சந்தேகமும் ஒளியும் நிழலும் போல் மாறி மாறித் தெரிந்தது. ரங்ககிருஷ்ணன் அவருடைய முகத்தைக் கூர்ந்து கவனித்து அவருக்கு இன்னும் முழு நம்பிக்கை வரவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

இவ்வளவிற்கு மனம் விட்டுப் பேசியும் அவருக்கு முழு நம்பிக்கை வராதது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவருக்கு