பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

ராணி மங்கம்மாள்

தென்றோ அவர்களை வெறுத்தார்கள் நம்மவர்கள்? உதாரணத்திற்கு மறவர் சீமை ஆட்சியில் அடங்காத நமது 'வடுகர் பட்டி' ஊரில் என்ன நடந்தது என்று இப்போது சொல்கிறேன், கேள் வடுகர்பட்டியின் தலைக்கட்டாக இருக்கும் லிங்கரெட்டியார் வீரசைவராக இருந்தும் தம்முடைய பிரதேசத்தில் கிறிஸ்தவ மதப்பிரசாரத்துக்கு வந்த பாதிரிகளை வெறுக்காமல் அவர்களுக்கு வசதிகள் செய்து கொடுத்திருக்கிறார். லிங்கரெட்டியாரின் குருவாகிய வீரசைவ சமயத் தலைவரே ஒரு சமயம் ரெட்டியாரை அழைத்து. 'லிங்க வழிபாட்டை ஏளனம் செய்யும் கிறிஸ்தவப் பாதிரிமார்களை உன் ஊரில் நுழைய விடாதே' என்று தடுத்தும் ரெட்டியார் அதைக் கேட்கவில்லை. தமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் எவ்வளவு கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கு எடுத்துக்கொண்டு அவர்களை முன்போலவே சகல உரிமைகளுடனும் வாழும்படி பார்த்துக் கொண்டார் ரெட்டியார். மறவர் நாட்டு எல்லையிலேயே மறவர் சீமை ஆட்சிக்குட்படாத பகுதியில்தான் இந்த நிலை. மறவர் சீமை எல்லைக்குள் மட்டும் இந்தச் சமரச நிலை நிலவ முடியவில்லை."

"நீங்கள் பிறரிடம் எவ்வளவுதான் சுமுகமாக நடந்து கொண்டாலும் உங்களால் சேதுபதியின் குணம் மாறிவிடப் போவதில்லை."

"அது எனக்கும் தெரியும் முத்தம்மா சேதுபதி வல்லாளகண்டர் அவருடைய அஞ்சாமையும், பிடிவாதமும் எதனாலும் மாறிவிடப் போவதில்லைதான்."

"பின் நீங்கள் செய்கிற இதெல்லாம் எந்தவித்தில் அவரைப் பாதிக்கும்?"

"இதன் மூலம் சேதுபதிக்கு ஒரு ராஜதந்திரச் சிக்கலை உருவாக்கிவிட முடிந்தாலே எனக்கு ஓரளவு வெற்றிதான் முத்தம்மா” .

"மனிதர்களைப் புரிகிற அளவு இந்த ராஜதந்திரங்கள் எனக்கு எப்போதுமே புரிவதில்லை."