பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

93

"மிகவும் நல்லது. அவை புரியாத ஒரே காரணத்தால் நீயாவது நிம்மதியாக இரு" என்று அவளை நோக்கிக் குறும்புப் புன்னகை பூத்தான் ரங்ககிருஷ்ணன்.


11. உதயத்தில் நேர்ந்த அஸ்தமனம்

சின்ன முத்தம்மாளும், ரங்க கிருஷ்ணனும் அரசியற் கவலைகள் ஏதுமின்றிச் சிறிது காலம் நிம்மதியாக வாழ முடிந்தது. எந்தப் பிரச்சனையும் ரங்ககிருஷ்ணனைச் சின்ன முத்தம்மாளிடமிருந்து பிரிக்கவில்லை. கிழவன் சேதுபதியை அவன் வெற்றி கொள்ள முடியாமலே திரும்பியதில் கூட ராணி மங்கம்மாளுக்கு வருத்தம் எதுவும் இல்லை. ரங்ககிருஷ்ணன் போகாமல் தானே ஏற்பாடு செய்து படைகளை அனுப்பியிருந்தால்கூட அந்த மறவர் சீமைப் படையெடுப்பு அப்படித்தான் பயனற்றுப் போயிருக்க முடியும் என்பது அவளுக்குத் தெரியும். அதனால் அவள் அதிகம் மனவருத்தப்படவில்லை.

'இளைஞன், அரசியல் முதிர்ச்சி அதிகம் இல்லாதவன். தந்தையால் பயிற்சியளிக்கப்படும் வாய்ப்பைக்கூட இழந்தவன்' என்றெல்லாம் ரங்ககிருஷ்ணனைப் பற்றிச் சில குறைகள் இருந்தாலும் அவனைப் பற்றிய திருப்தி என்னவோ அவற்றைவிட அதிகமாக இருந்தது. நிம்மதியாக ஆளும் பொறுப்புகளை அவனிடம் விட்டுவிட்டு அவ்வப்போது அறிவுரை கூறும் அளவுக்கு ஒதுங்கி நிற்கலாம் என்று கூட அவளுக்குத் தோன்றியது. மகன் முழு நம்பிக்கைக்குரியவனாக இருந்தான்.

ரங்ககிருஷ்ணன் பொது மக்களின் குறைகளை அறிவதில் சமநோக்கு உடையவனாக இருக்கிறான். மக்கள் குறைகளை அறிய அடிக்கடி மாறுவேடத்தில் சகல பகுதிகளுக்கும் நகர பரிசோதனைக்குச்