பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I 2.2 = - அமுைக்கக் கூடிய தெம்பு இதுவரை ஆட்சியாளர்களுக்கு ஏற்படவில்லே! ஆதலால், இம்மாவட்ட இசுலாமியரது இந்த வாழ்க்கைப் பிரச்னை - வேற்று நாட்டில் உழைத் துப் பிழைக்க வேண்டிய பிரச்னை தொடர்கிறது. ஆங்கில ஆட்சியாளர், இந்த சமூக த் தி ன ரை, 'லெப்பை என்று மட்டும் வகைப்படுத்தி கல்வி, பொருளாதார நிலைகளில் பிற்பட்ட வகுப்பினராக அறிவித்தனர். பெருந்தொகுதியினராக இந்த மக்கள் உள்ள சிற்றுார்களிலும் பேரூர்களிலும் ஆங்காங்கு பல துவக்கப் பள்ளிகளையும் உயர் தொடக்கப் பள்ளிகளையும் இந்த சமூகத்தினர் நடத்தி வருகின்றனர். விருதுநகர், சித்தார்கோட்டை, அபிராமம், இராமநாதபுரம், கிழக்கரை, இளையான்குடி, இளையான்குடி பு துார் ஆகிய ஊர்களில் இந்த சமூகத்தினரது மேனிலைப் பள்ளிகளும் , ஓ ருதொழிற்பயிற்சி கல்விக்கூடமும் (பாலிடெக்னிக்) செயல்பட்டு வருகின்றன. சமயக் கல்விக்கென மத்ரஸா எனப்படும் அரபிமொழிப் பள்ளிசளும் இந்த மாவட்டத்தில் இசுலாமியர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. தங்களது மூதாதையரது மொழியான அரபியிலும் தாய்மொழியான தமிழிலும் தேர்ந்த பல பேரறிஞர்கள் இந்த மாவட்டத்தின் சிறந்த மரபுக்கு அன்ரிகலனாக விளங்குகின்றனர். கனககவிராயர், மீர் ஜவ்வாது புலவர், வண் ணக்களஞ் சியப்புலவர், வண்ண பரிமளப் புலவர், கு ணங்குடி மஸ்தான், மாப்பிள்ளை லெப்பை ஆலீம், சையது ஆலிப் புலவர், உமறுகத்தாப் புலவர் அவர்களில் தலையாய வர்கள் ஆவர். இசுலாம் எங்கள் வழி, இன்பத் தமிழ், எங்கள் மொழி என்ற பாரம்பரியத்தை அவர்களது: ஆக்கங்கள் என்றென்றும் பறைசாற்று வனவாக is ੇ ΕΟ ΦΥΤΕΥΤζüΤ.