பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I 30 தவர்களிடையே மட்டும் கொண்டுள்ளனர். இந்தப் பண்பு ஒருவகையில், அவர்களுக்கு பயனுள்ளதாக வும் இருந்து வந்துள்ளது. அவர்களது பிணைக்கப் பட்ட உறவுடன் கடுமையான உழைப்பும், பொரு ளாதாரமும், ஒருசேர இணைந்து வளர்ச்சியுற்று அண்மைக் காலத்தில் ராஜபாளையம் தமிழகத்தின் சிறந்த தொழில் மையமாக அமைவதற்கு உதவி யுள்ளது. ராஜாக்கள் பாளையம் என்ற பெயருடன் சிற்றுார் ஒன்று பரமக்குடி வட்டத்தில் உள்ளது. இந்த வட்டத்திலும், கமுதி வட்டத்திலும் தொட் டியல் என்ற கம்பளத்தார் உள்ளனர். இந்தப் பிரிவினரது தலைவரது கம்பளத்து நாயக்கர், அல்லது கோடங்கி நாயக்கர் என அழைக்கப்படுகின் றார். அவர்க்கு மதிப்பும், மரியாதையும் அந்த மக்க ளிடம் உண்டு. பிறப்பு, இறப்பு, மணவிழா போன்ற அனைத்துப் பொது நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்வார். இந்த மக்களது மணவிழா சடங்குகள் புதுமையானவை. ஏழுகலம் நிறைவுள்ள கம்பு தானி யத்தை கொடுத்துத்தான் மணப்பெண் நிச்சயிக்கும் முறை அண்மைக்காலம்வரை இந்த சமூகத்தாரிடையே இருந்தது. == H . பொதுவாக, வடுகர் உழைப்பாளிகள். வேட்டையாடு வதில்மிகுந்த வேட்கை கொண்டவர்கள். சேவல் சண்டைகதுவாழிச் சண்டை, செப்பிடு வித்தை, மகுடி ஜாலம் ஆகிய பொழுது போக்குகளும், உ று மி .ே ம ள ம் ைந யாண் டி மே ள ம் ஆ கி ய நாட்டுப்புற இசைக்குழுவையும் தமிழகத்திற்கு புகுத் தியவர்கள் இந்த மக்கள்தான். மேலும், இன்று தமிழக மக்களது காதுகளிலும், கழுத்திலும் இடம்