பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 32 – கட்டுப்பட்டு வாழ்ந்தனர். ஆளுல் அடுத்து வந்த நாயக்க மன்னர்களும் ஆற்காட்டு நவாப்பும் அவர்களை தங்கள் ஆட்சி வாரம்புக்குள் உட்படுத்துவதற்காக பல போர்களில் ஈடுபட வேண்டியதாயிறது. கிழக்கு இந்தியக் கம்பெனியாரது நிர்வாகத்தின் பொழுது, இந்த மக்கள் அவர்களுக்கு எதிராகப் பெரும் புரட்சியில் ஈடுபட்டனர். இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதியின் தலைமையில் ஒரு பெரும் பிரிவும், சிவகங்கை ராணி வேலு நாச்சியார் பிரதானி கள் மருது சகோதரர்கள் அணியில் இன்னொரு பிரிவு மாக இந்த மக்கள் கிளர்ந்து எழுந்து வெள்ளை ஆதிக் கத்தைத் தமிழ் மண்ணில் இருந்து வேரோடு களைத் தெறியப் போராடினர். கி,பி. 1801 இல் இந்தப் போ ராட்டம், துரோகிகளது செயல்களாலும், வெடி மருந்து பலத்திலுைம் தோல்வி கண்டது. வெற்றி பெற்ற கும்பெனியார் இந்த மக்கள் ஆயுதம்தாங்கும் உரிமையைப் பறித்து கோட்டைகளில் தொகுதிய க வாழக்கூடியசுட்டுவாழ்க்கையையும்குலைத்து,கோட்டை களை இடித்து தகர்த்து விட்டனர். மீண்டும் இந்த மக்கள் ஆங்கில அரசுக்கு எதிராக அணி திரளக்கூட து என்பதற்காக, நாளடைவில் இந்த மக்களை சட்ட பூர் வமாக குற்ற பரம்பரையினராகத் தீர்மானித்து அவர் களது சமூக நிலையைத் தாழ்த்தி பெரும் கொடுமைக் குள்ளாக்கினர். இந்த நிலையைக் கண்டு நெஞ்சு நெகிழ்ந்த மகாகவி பாரதியார் பரவரோடு குறவருக் கும் மறவருக்கும் விடுதலை" என விடுதலை பாடினர். 1947இல் நாடு விடுதலை பெற்றவுடன் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் ஆட்சியாளர், அந்த குற்ற பரம்பரைச் சட் டத்தை நீக்கி மறக்குடி மக்களது சமூக நிலையை மீண்டும் உயர்த்தி சலுகைகள் பெறுவதற்காக வளர்ச்