பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அகம்படியார் மறவர், கள்ளர் ஆகிய சமூகத்தினர்களுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்கள் இவர்கள். இவர்களையும் இனத்து முக்குலத்தோர் என்று இந்த மூன்று கசமூத் தினரையும் அழைத்தல் வழக்கம். அகம்படியர் என்றும், அகமுடையார் என்றும் இவர்கள் அழைக்கப் படுகின்றனர். பத்து, பதின்மூன்ருவது நூற்ருண்டைச் சேர்ந்த ராஜராஜன், ர்ாஜேந்திரன், குலோத்துங்கன் ஆகிய சோழமன்னர்களது கல்வெட்டுக்களில் அகம்படி, அகம்படி முதலி, அகம்படியார்பெண்டு என்ற வழக் காறுகள் திருச்சி, தஞ்சை, தென் ஆர்க்காடு மாவட்டங் களில் காணப்படுகின்றன. = இவைகளில் இருந்து, இந்தச் சமூகத்தினர், சோழர்கள் ஆட்சியின் பொழுது, வாண தரையர்களைப் போன்று, பாண்டி நாட்டில், அதன் ஒரு பகுதியான கிழக்கு இராமநாதபுரத்தில் குடிபுகுந்தவர்கள் என்பது உறுதி யாகிறது. இங்குள்ள பூர்வ குடிகளான மறவர் களுடனும், பின்னர் வேளாளர்களுடனும் அந்நியோன் னியமாக வாழ்ந்து வந்ததன் காரணம க, விவசாயம், நிர்வாகம் ஆகிய துறைகளில் ஈடுபட்டு, அவற்றைத் தங்களது வாழ்க்கை நிலைகளாகக் கொண்டுள்ளனர். அடுத்து, பதினெட்டாம் நூற்ருண்டில் சிறப்புற்று விளங்கிய இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களிடமும் சிவகங்கை அரசர்களிடமும் பல அரசியல் பணிகளில் ஈடுபட்டு உயர்ந்து நின்றனர். இதனைக் குறிக்கும் வகை யில் தங்கள் இயற்பெயருடன் சேர்வை அல்லது சேர்வைக்காரர் என்ற விகுதியையும் இணைத்து வழங் கினர். சேர்வை என்பது பணி (சேவை) என்ற பொரு