பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


J. பதினெட்டாம் நூற்ருண்டின் பிற்பகுதியில் தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த பாளையங்களில் அமைதி பின்மை, புரட்சிப்போக்கு, அந்நிய எதிர்ப்பு அதிகரித் தன. இதன் காரணமாக கும்பெனியார் வஞ்சகமான, மிருகத்தனமான அடக்குமுறைகளைக் கையாண்டு பாளையங்களின் கிளர்ச்சிகளை அடக்கி ஒடுக்கினர்கள். கூடவே ஆட்சிப் பிரிவுகளை மாற்றி ஜில்லா, தாலுகா, கஸ்பா என்பன போன்ற பிரிவுகளையும், அவற்றின் மேலாளராக கும்பெனியாரே தங்கள் நாட்டவரான பரங்கிக் கலைக்டர்களையும் நியமனம் செய்தனர். அவர்களுக்கு உதவியாக ஜமீன்தார்கள் என்ற புதுவகை யான நிலப் பிரபுக்களையும் உருவாக்கினர். இராமநாதபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இங்கு த ன் ைட் சி செய்த ேச து ப தி க ள், முத்துக்கிருஷ்ணப்ப நாயக்க மன்னர் காலம் முதல் பாளையக்காரர்களில் தலைமை பூண்டவர்களாக இருந்து விந்தனர். இவர்களது ஆட்சிப் பகுதி மறவர் சீமை என்றும், சேதுநாடு என்றும் வழங்கப் பெற்றது. கி. பி. 1795 இல் ஆற்காட்டு நவாப்பிடமிருந்து உடன் படிக்கை ஒன்றின்மூலம், இந்தப் பகுதியிலும் இணைந்த தென்மாநிலத்திலும் மேலாதிக்கத்தைப் .ெ ப ற் ற கும்பெனியரர் தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இராமநாதபுரம், சிவகங்கை மன்னர்கள் ஈடுபட்டதை முறியடித்ததுடன், அவர்களது ஆளுகைப் பகுதிகளை ஜமீன்தாரிகளாக மாற்றியமைத்தனர். இதன்படி தங்களுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை கப்பமாகச் செலுத்தும் அரச வழியினரை சிவகங்கையில் 1801 லும், இராமநாதபுரத்தில் 1803 லும் ஜமீன்தார்களாக நியமனம்செய்தனர். இதற்காக