பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143

மலைக்கு கிழக்கேயும், - வெள்ளாற்றுக்குத் தெற்கேயும் இவர்களது குடியேற்றங்கள் ஏற்பட்டன. ஆனால், முதலில் இன்றைய இளையாத்தங்குடியில் சிறிது காலம் தங்கி இளைப்பாறிய பிறகு, சிறுசிறு தொகுதியினராக ஒன்பது ஊர்களில் குடியேறினர். இன்று அந்த ஒன்பது ஊர்களையே தங்கள் பூர்வகிளே களாகக் கொண்டு மணவினை உறவினை உருவாக்கிக் கொள்கின்றனர். ஒரே கிளையினர் தங்களுக்குள் மன உறவுகள் கொள்வது இல்லை. ஆனல் பங்காளிகளாக பாந்தத்துடன் பழகிக் கொள்கின்றனர். இளையாத்த ங் © Lo- மாத்துார், இரணியூர், பிள்ளையார்பட்டி, வைரவன்கோவில், இலுப்பக்குடி, நேமம், சூரக்குடி, வேலங்குடி ஆகியவைகளே அந்த ஒன்பது ஊர்களாகும். இன்னும் இந்த மக்கள் அருவியூர்” என்றி குலசேகர பட்டணத்திலும், பிரான்மலையிலும் பன்னெடுங் காலம் நிலைத்து இருந்தமைக்குச் சான்ருக அந்த ஊர்களில் பல கல்வெட்டுக்கள் உள்ளன. இந்த ஊர்களைத் தவிர கீழச் சேவல்பட்டி, செவ்வூர் கண்டனுார், கானடு காத்தான். பள்ளத்தூர், கோட்டையூர், காரைக்குடி, அரியக் தடி. தேவகோட்டை, நாட்டரசன் கோட்டை ஆகிய ஊர் களிலும் பெரும்பான்மையினராக இந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தின் தொன்மையான வணிகச் சாத்துக்களான நாளு தேசிகளையும், திசையாயிரத்து ஐந்நூற்று வரை யும் சித்திர மேழி சாத்தினரையும் நினைவுபடுத்தும் வண்ணம் அண்மைக் காலம் வரை கடல் கடந்த நாடு களில் வாணிபத்தில் ஈடுபட்டு வற்ருத பெருஞ் செல் வத்தை ஈட்டினர். இந்த வணிகத்திற்கு அவர்களது பேச்சு வழக்கில் கொண்டு விற்றல்' ' என வழங்கப் படுவதுஉண்டு. இவர்களது வணிகமரபின் தொன்மை