பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


145 2. ஆயிரவைசியர் செட்டி என்ற விகுதியுடன் வழங்கப்படும் இந்த மக்கள் நகரத்தாருக்கு-நாட்டுக் கோட்டை செட்டி மக்க ளுக்கு-அடுத்த படியான எண்ணிக்கையில் இந்த மாவட்டத்தில் உள்ளனர். இவர்களது பூர்வீகம் பற்றிய பலவிதமான செவிவழிச் செய்திகள் உள்ளன. ஆனல் வரலாற்று வடிவிலான தடயங்கள் எதுவும் இல்லை. எனினும் அவை, இந்த சமூகத்தினர், நகரத் தார் போன்று வடபுலத்தினின்றும் இந்த மாவட்டத் தில் குடிபுகுந்தவர்கள் என்பதையே குறிக்கின்றன. பெரும்பாலும் சோழ நாட்டிலிருந்து தென் திசைக்கு வந்தவர்கள் என்பது பெரும்பான்மையினரது கருத்து. ஆனல் எட்கார்தர்ஸ்டன் என்ற நூலாசிரியர் இவர் .கள் தொண்டை மண்டலம், மஞ் சக்குப்பம் பகுதி யினின்றும் வந்தவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் திருவாடானை, இராமநாதபுரம், பரமக்குடி. இளையாங்குடி ஆகிய வட்டங்களில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். திருவாடானை வட்டத்திலுள்ள பாண்டு குடியும், பரமக்குடி வட்டத்தில் உள்ள பரமக்குடியும் இவர்களது பழம்பெரு பகுதிகளாகக் கரு தப்படுகின்றன. இவர்கள் பெரும்பாலும் ஜவுளி. அரிசி, பலசரக்கு வணிகத்தில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களை மஞ்சப் புத்துார் செட்டிகள் எனக் குறிப்பிடுவது உண்டு. ஒரு வேளை மஞ்சள்குப்பம் ஊரை தாயகமாக உடையவர் கள் என்ற காரணத்தின் அடிப்படையாக வந்த வழக்காக இருக்கலாம். இவர்களில் சிறுபிரிவினர் பொன், வெள்ளி, நகைகள் வியாபாரத்திலும் அந்த நகைகள் ஈட்டின் பேரில் கடன் தொகை வழங்கும் தேவா தேவிலும் ஈடுபட்டு உள்ளனர். இவர்களைக் காசுக் கடை செட்டிகள் அல்லது மதுரைச் செட்டி தள் என வழங்குதல் வழக்கமாக உள்ளது.