பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 of 6 o - இராமநாதபுரம் சீமையை ஆண்ட சேதுபதிகளின் சிறப்பு மிக்க ஆட்சிக்காலத்தில் இந்தச் சிறுபான்மை சமூகத்தின் சிலர் சேது நாட்டின் பெருமைக்குரிய குடி மக்களாக இருந்ததை கி.பி.1745 ஆம் ஆண்டைய செப்புபட்டயம் ஒன்று சுட்டிக் காட்டுகிறது. பின்னர் தொடர்ந்த கிழக்கிந்திய கம்பெனியார் ஆட்சிக்காலத் தில் சென்னையில் தழைத்து ஒங்கிய பேரி செட்டி களைப் போன்று இவர்கள் எந்தவித முன்னேற்ற மும் எய்தவில்லை. நாடு முழுவதும் தேசிய விடுதலை உணர்வில்ை உந்தப் H. பட்டு அரசியல் எழுச்சி கொண்ட பொழுது இந்த சமூ கத்தினரும் தங்களது தியாககாணிக்கையை நாட்டிற்கு நல்கினர். ஆனால் நாட்டு விடுதலையின் தாக்கம் அவர் களுடைய சமூக நிலையில் தீவிர மாற்றங்களைக் கொணர வில்லை. தொடர்ந்து வைதீக பழக்க வழக்கங்கள், வர தட்சணைக் கொடுமை, கல்வியில் பின்னடைவு ஆகிய வை அவர்களிடையே நிலைத்துள்ளன. என்ருலும் பரமக்குடி நகரில் வள்ள இந்த சமூகத்தினர் மட்டும் மிகவும் ஐக்கியமான முறையில் ஆயிரவைசியர் சபை என்ற அமைப்பின் கீழ் தங்காது சமூகம் சம்பந் தப்பட்ட பொதுக் சாரியங்களை நிர்வகித்து வருகின்ற னர். பர மக்குடி நகரில் உள்ள பூரீ மீனுட்சி சுந்தரேஸ் வரர் திருக்கோயில், பூரீ முத்தா ல பரமேஸ்வரி திருக் கோயில், ஆயிாவைசியர் மேல்நிலைப்பள்ளி, ஆயிரவை சியர் உடற்பயிற்சி சாலைகள் ஆகியவைகளை இந்தச் சபையினர் பராமரித்து நிர்வகித்து வருவதுடன், பா மக்குடி அப்யாச்சாமி செட்டியார் வகையருக்கள் இந் தச் சமூகத்தினரது நலனுக்காக ஏற்படுத்தியுள்ள 'நந் தவன கட்டட் டிரஸ்ட்” என்ற பொது அமைப்பினையும் இந்தச் சபை இயக்கி வருகிறது. -