பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 == டானி கோரக்கி நாதர் ஆலயம் ஒன்று உள்ளது.) தமிழக இஸ்லாமியருக்கும் இந்த செட்டி மக்களுக்கும் இடையில் டன்னிரண்டு, பதின்மூன்ரும் நூற்றாண்டு களில் ஏற்பட்ட வணிகத் தொடர்பின் அடிப்படையில் பிற்க லத்தில் பட்டாணி தெய்வ வழக்கும் வழிபா டும் புகுத்து இருக்கலாம். இவர்களே தவிர, அருப்புக்கோட்டை திருச்சுழியல் வட்டத்தில் உள்ள சாலியரும் தங்களைச் செட்டிகள் என அழைத்துக் கொள்கின்றனர். சேணியர் என்றும் சேடர்கள் என்னும் இவர்களது தொழிலும் வாணிபம் இல்லை. மாறாக நெசவுத் தொழில்தான் இவர்களது நிகர ற்ற வாழ்க்கையாக உள்ளது. தேவர்களுக்கும் ஏற்ற ஆடைகளை நெய்து தரவல்லவர்கள் என்ற பொ ருளில் இவர்களைத் தேவாங்கர் எனவும் வழங்குதல் உண்டு. பிறிதொரு பிரிவினர், இலை வாணிபச் செட்டி கள் என்ற பிரிவினர், எள்ளில் இருந்து எண்ணெய் வடிக்கும் செக்காலைகளை இயக்குபவர்கள். செக்காரச் செட்டி மக்கள்' என்பது மகாகவி கம்பனது வாக்கு. இன்று விஞ்ஞானம் வளர்ந்து மனித வாழ்க்கைக்கு உத வும் பணியில் பொறிகள் ஈடுபடும் நிலைக்கு வந்த பிறகும் இவர்கள் மாடுகள் பூட்டிய செக்கடிகளைக் கைவிடுப வர்களாக இல்லை. O