பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/157

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


于T丽T前 தென்னிந்திய பூர்வகுடிகளான இவர்கள், வெவ்வேறு பெயர்களில் கேரளத்திலும் கர்நாடகத்திலும் வழங்கப் பட்டாலும், இந்த மாவட்டத்தில் சாளுர் என்றே வழங்கப்பட்டு வருகின்றனர். பதினேராவது நூற்ருண் டிற்கு முன்னர் இந்தச் சொல் தமிழக இலக்கியங்களி லும் கல்வெட்டுக்களிலும் காணப்படவில்லை. கள் இறக் கும் தொழிலையுடையவர்களை ஈழவர், பழையர், படு வர், துவசர் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டு வந்த னர். அவர்களது குடியிருப்பு ஈழச்சேரி என வழங்கப் பட்டது. பின்னர் தமிழ்நாட்டில் வடமொழி பிடிப்பு இறுகிய நிலையில் இந்த மக்கள்ைக் குறிக்கசெளந்திகர் என்ற வடசொல் தமிழ்ச் சொல்லாகப் பயன்படுத்தப் பட்டது. அத்துடன் கிராமணி என்ற வடசொல்லும் நாடார் என்ற தமிழ்ச் சொல்லும் வழக்கிற்கு வந்தன. சாறு என்ற செ ல் மூலத்திலிருந்து சானர் உருப்பெற் றதாக ஒரு சிலரும், சான்ருேர் என்ற சொல் லின் திரிபு என இன்னும் சிலரும், இந்தச் சொல்லுக்கு தொன்மை கற்பிப்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இல்லை. கள் இறக்கும் மரத்தில் ஏறுவதற்கு முன்னர் கால்களில் அணிந்து கொள்ளும் நாறின் வளை” விரித்த கையின் (சாண்) அளவு இருப்பதால், அதனுடைய அடிப்படை யில் சாண் நாறு” என மாற்றம் பெற்று இருப்பதாக வேறுசில ஆய்வாளர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர் இந்தச் சொல்லின் மூல்ம் எப்ப்டி இருந்தாலும் அதல்ை சுட்டப்படுகிற பொருள்கள் இறக்கும் தொழிலே உ-ை யவர் - என்பதுதான். இந்தத் தொழிலில் அபாயமும் சிரமமும் இருந்தாலும் இந்தத் தொழிலினை இந்த சமு கத்தினர் முழுக்கவும் தங்கள் அன்ருட வாழ்க்கைக்கு