பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 தது. ஆளுல் இந்தியா விடுதலையடைந்த பிறகு இந்தச் சமூகத்தினரதுகோரிக்கைசட்டரீதியாகநிறைவேறியது. சமுதாய சமத்துவம் பெற்ற இந்த மக்களது வாழ்வு கடந்த நாற்பது ஆண்டுகளில் முழுக்க முழுக்க மாறி விட்டது. கள் வடிக்கும் தொழிலில் ஐந்து சத மக்கள் கூட ஈடுபடவில்லே. ஆளுல் தானியங்கள், பலசரக்கு, தீப்பெட்டி தயாரித்தல், பெயிண்ட் உற்பத்தி, வெடி மருந்து, செம்பு அலுமினிய பாத்திரங்கள் தயாரிப்பு, அச்சுப்பதித்தல் (வித்தோ), அச்சிடுதல் ஆகியதொழில் களில் ஈடுபட்டு அவைகளைத் தங்கள் வயப்படுத்திக் கொண்டுள்ளனர். இத்தகைய புதிய தொழில்களின் பிரதானக் கேந்திரமாக சாத்துார், சிவகாசி, விருது நகர் ஆகிய ஊர்கள் விளங்கி வருகின்றன. இவர்களுடைய இந்த துரித வளர்ச்சிக்கு அவர்களி டையே உள்ள ஒற்றுமை, பொறுமையோடு உழைக் கும் மனப்பான்மை ஆகியவை கர னியங்களாகும்.இவை களுக்கு மேலாக இந்த சமூக மக்களது நலன் கருதி ஆங்காங்கு அவர்கள் அமைத்துள்ள மகிமை என்ற பொதுநிதியும், இந்த மக்கள் உழைத்திட, உழைப் பால் உயர்ந்திட ஊக்கமளித்து வருகிறது. இவர்களிடையே திகதின மாற நாடார் என்றும் இந்து நாடார் என்றும் இருபெரும் கிளைகள் இருந்து வந்த பொழுதிலும், அவர்களது உறவு முறை, தொழில் முன்னேறறம் ஆகியவைகளுக்கு அவை இடையூருக இருந்து வரவில்லை. இவர்களில் ஒரு பகுதியினர் கிறித் துவ மதத்தை தழுவியுங்கூட இவர்களுக்கிடையில் மணவினை உறவுகள் தொடர்ந்து வருவது குறிப்பிடத் தக்கதாகும்.