பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


154

  • m.

பின்னர் பரமக்குடி பாளையத்தில் தும்பிச்சி நாயக்கரது ஆதரவிலுைம் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களது ஆதரவிலுைம் இந்த மாவட்டத்தில் குடியேறினர். இந்துமத அனுஸ்டானங்களை, பிராமணர்களைப் போல இவர்களும் மேற்கொள்ளலாம் என்று தெளிவாக கி.பி. 1705 இல் அரசியல் உரிமை வழங்கிய ராணி மங்கம்மாளின் சாசனத்தில் இந்த சமூகத்தினர் பட்டு நூல்காரர்' என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர். நாளடைவில், இவர்கள் தங்களை செளராஷ்டிரர் எனவும் செளராஷ்டிர பிராமணர் எனவும் அழைத்துக் கொண் டனர். தமிழக பிராமணர்களைப் போன்று தங்கள் பெயர்களின் விகுதியாக ஐயர், ஐயங்கார், ராவ் பாகவதர், சாஸ்திரிகள் என்ற சொற்களை இணைத்துக் கொண்டனர். இந்துமத வைணவப் பிரிவை (வடகலை)த் சார்ந்து ஒழுகிவரலாயினர். ஆண்கள் பிராமணர்களைப் போன்றும் பெண்கள் தெலுங்கர் போன்றும் தங்கள் ஆடை அணிகலன்களினல் தோற்றமளிக்கின்றனர். இன்னும், இவர்கள் பேசுகின்ற செளராஸ்டிரமொழி யில் தெலுங்கு மொழிச் சொற்களின் கலப்பு மிகுதி யாக உள்ளது. பரமக்குடி நகரில், வைகை ஆற்றங்கரையின் இருகரை களிலும் நிலைத்து வாழுகின்ற இவர்கள் நெசவுத்தொழி லை மேற்கொண்டுள்ளனர். சமூக, பொருளாதார நிலை களில் பின்தங்கியவர்களாக இருந்த லும் அரசியல் விழிப்புடையவர்களாக இருக்கின்றனர். இது காரண மாக பல இயக்கங்களில் பங்கு கொண்டு சிறப்பித்துள் ளனர். Ο