பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நிகழ்ச்சிக் கோவை பாண்டிய மன்னர்களது வாரிசு உரிமைப் போரில் பராக கிரம பாண்டிய தேவருக்கு உதவுவதற்காக இலங்கையிலிருந்து பெரும் படையொன்று இரா மேஸ்வரத்தில் கரையிறங்கியது. (1168) பாண்டிய நாட்டில் இஸ்லாமிய பிரச்சாரம் செய் வதற் 5ாக மதீனத்திலிருந்து தொண்டர்களுடன் வந்த செய்யது இபுரு:கிம் (வலி) அவர்கள் பாண்டி யர்களுடன் போரிட்டு உயிர்த் தியாகியானது. (1192) பிரபல வெனிஸ் நகரச் சுற்றுலாப்பயணி மார்க்கோ போலோ இராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதி க்கு வருகை தந்தது. (1292) அல வுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாவிக்காபூர் டில்லியிலிருந்து இராமேஸ்வரம் வரை பயணம் வந்தது. (1311) இலங்கையிலிருந்து மாலிதீவுகளுக்குப் புறப்பட்ட உலகப் பயணி இபுனு பதுத்தா கடற்கொந்தளிப் பினல் கிழக்குக் கடற்கரை வந்து சேர்ந்தது. (1344) மறவர் சீமையில் மதமாற்றம் சம்பந்தமாக போர்ச் சுக்கல் நாட்டு பாதிரியார் கான்சால்வோ பொ னன்டிஸின் சுற்றுப்பயணம். (1606) இராமநாதபுரத்தில் சாத்தனர் ஆலயம் அமைக் கப்பட்டு சேதுபதி மன்னரால் நிலக்கொடை வழங்கப்பட்டது. (1628)