பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இமயமுதல் குமரிவரையிலான பலமொழி பேசும் பல்வேறு இனமக்களின் ஒருமைப்பாட்டு மையமாக விளங்குகின்ற இராமேஸ்வரம் ஆலயம் இந்த மாவட் டத்தில் உள்ளது. சுற்றிலும் கடல் சூழ்ந்த அங்கு சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக எத்துணையோ நூற் ருண்டுகளாகச் சிறந்து விளங்கும் உலக அதிசயங்களில் ஒன்ருன 'மூன்ருவது பிரகாரம் இந்த ஆலயத்தில் தான் அமைந்துள்ளது. தங்களது சமய உண்மைகளை உணர்த்தி மக்களது ஆதரவைப் பெறுவதற்காக பன்னிரண்டாம் நூற்ருண்டில் அரபு நாட்டில் இருந்து வந்த சுல்தான் சையிது இபுராகிம் சகீதும், பதினேழாம் நூற்ருண்டில் போர்ச்சுகலிலிருந்துவந்த ஜான். டி.பிரிட் டோவும், தங்களது இரத்தத்தைச் சிந்தி, இன்னுயிர் க்ளை வழங்கியதும் இந்த மண்ணில்தான். குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு உண்டோ என்று சோழனைச் சினந்து வந்த கவிச் சக்கரவர்த்தி கம்பனும், எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேருென்றும் அறியேன் என்று தன்னடக்கத்துடன் வாழ்ந்த தாயுமான அடிகளும் தங்களது மரணத்தைத் தழுவிக் கொண்டதும் இ ந் த மண்ணிலேதான். (நாட்டரசன்கோட்டை-இராமநாதபுரம்) இந்தப்புனித மண்ணின் மகத்துவத்தை, பாரம்பர்யத் தைக் காக்க அந்நியரை எதிர்த்து விடுதலை வேள்விய்ை நடத்தி தியாகிகளான ஆயிரக் கணக்கான வீர, வீராங்கனைகளின் முன்னேடியாக விளங்கி, களபலியான க ம்ம ந் தா ன் கான்சாகிபும், பு ர ட் சி வீ ர ன் முத்துராமலிங்க சேதுபதியும் இந்த மாவட்டத்தின் வரலாற்று நாயகர்கள். - f