பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

  • F

வெள்ளையனே வெளியேறு' என்று 1942 ஆகஸ்டில் இந்தியா முழுவதும் குரல்கொடுத்த பொழுது, வெள்ளை ஏகாதிபத்தியத்துடன் நேரடி மோதலை, இந்த மாவட்ட மக்கள்தான் தேவகோட்டை, திருவாடானை மற்றும் பூலாங்குறிச்சி ஆகிய இடங்களில் தொடுத்து விழுப்புண் பெற்றனர். விடுதலைக்குப் பின்னரும் உரிமை வேண்டி இம்மாவட்ட மக்கள் செய்த போராட்டங்கள் மகத்தானவை. வத்திராயிருப்பு விவசாயிகள் போராட்டம், கீழப்பசளை இனம்தார் களின் கொடுமையை எதிர்த்துக் கிளர்ச்சி, பரமக்குடி யில் நெசவாளர் போராட்டம் இ ப் ப டி எத் துணையோ உண்டு. இவைபோன்ற சிறப்பான அரசியல் நிகழ்ச்சிகள், அதன் விளைவுகள், சமூக நிலை யி ல் ஏற்பட்ட மாற்றங்கள், சாதிக் கலவரங்கள், கல்விமேம்பாடு போன்ற எண்ணற்ற நிகழ்ச்சிகள் உள்ளன. பலதுறை களிலும் பயிலும் மாணவர்கள், ஆய்வுகளை மேற் கொள்ள விரும்பும் பொதுமக்கள் இப்படிப் பலருக்கும் பயன்படும் வகையில் இந்தச் சிறுநூல் தொகுக்கப் பட்டுள்ளது. காலமின்மை போன்ற காரணங்களில்ை இந்நூலில் கூடுதலான விவரங்களுக்கு இடமளிக்க இயலவில்லை. எனினும் லெனின் சமூக வரலாற்று ஆராய்ச்சி நிறுவனம் தொடர்ந்து வெளியிடவிருக்கும் பல்வேறு வகையான இத்தகைய ஆராய்ச்சி வெளி யீடுகள் இந்தக் குறைகளை நிறைவு செய்யும். O