பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/190

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


:த்தொன்பதாம் நூற்ருண்டு வையை இந்த மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆாமைதுாை, சிவகங்கை, ப்ர மக்குடி, இளையான்குடி இராமநாதபுரம், ஆகிய வட்டங்கள்ல் நஞ்சைப் பயிர்களின் விளைச்சலுக்கு ஆதாரமாக இருந்து வருவது வையை ஆறு. இதனுடைய கிளையான கிருதுமால் நதி, அருப்புக்கோட்டை முதுகுளத்துார் வட்டங்களில் சில பகுதிகளது செழுமைக்கும் காரண மாக உள் ளது. இந்த பகுதியின் மொத்த நஞ்சை சாகுபடி பாப்பில் நாலில் ஒரு பகுதி வையையின் வளத்தால் விளேவதாகும் எனக் கணக்கிடப் பட்டுள்ளது. பழனி மலைத் தொடரில் பிறந்து ஆண்டிபட்டி வருஷ நாடு காடுகளில் தவழ்ந்து திரிந்து மதுரையை வலம் வந்து இந்த மாவட்டத்தில் சிலைமான் அருகில் துழைகின்றது. சங்க இலக்கியங்களின் சிலப்பதி காரம், கல்லாடம் போன்ற காப்பியங்கள் வையை யின் வளத்தையும், அதல்ை மக்கள் பெறுகின்ற நலத்தையும் வாழ்த்துகின்றன. ஆனல் இந்த மாவட்டத்தைப் பொறுத்த வரையில் வையை, வான் இபாய்ப்பினும் தான் ப்ொய்யாத வளம் கொழிக்கும் நீர்நிலை அல்ல. இதன் நீர்வள்ம் ஆண்டு தோறும் நீண்டும் சுருங்கியும் பெருகியும் அருகியும் பய னுாட்டும் தன்மையுடையதாக இருந்து வருகிறது. இதனை விளக்குகின்ற வரலாற்றுச் சுவடிகள்ன் சில பகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 1820-21 சிறிய அளவில் வெள்ளம் 1823-24 வையையின் சுருங்கிய வெள்ளம் இந்த மாவட்டத்தை எட்டவில்லை 1824-25 பெரும் வெள்ளம் 1825-26 வெள்ளப் பற்ருக் குறை 1829-30 வையை வறண்டு விட்டது. 1834-35 மானமதுரை வரை வெள்ளம் வந்து நின்று விட்டது.