பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/193

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


_ கோட்டை ஆகிய திருப்பதிகளில் இவர்கள் தொகுதி யாக வாழ்ந்து வந்ததை சிற்றிலக்கியங்களும் கல் வெட்டுக்களும் சொல்கின்றன. 'பதி இலார், 'தனிச் சேரிப்பெண்டு' .ே வரடியார்' என் கல்வெட்டுக் களில் இவர்கள் சுட்டப்படுகின்றனர். திருஉத்தரகோசமங்கையிலும், மருதுார் என்ற நயினர் கோயில், திருப்புல்லாணி, நாட்ட்ரசன்கோட்டை ஆகிய ஊர்களிலும் இந்த மக்கட்பிரிவினர் இருந் ததை சேதுபதி விறலிவிடு தூது, நயிஞர்கோவில் வழிநடைச் சிந்து, திருப்புல்லாணி நொண்டி நாடகம், கண்னுடையம்மன் பள்ளு ஆகியவைகளில் அவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். அடியார்களின் உள்ளத்தால் உகந்து அன்பினல் சொன்ன தேவா ம் , திருவாசகம, திவ்விய பிர்பந்தம் ஆகியவைகளே இறைவன் திருமுன்னர் பாடியும் ஆடியும் மக்களை பக்தி வழியில் பரவசம் கொள்ளச் செய்த இவர்களே அந்தந்த கோயில் அறங்காவலர்களும், இறையன்பர் களும் ஆதரித்து வந்தனர். அவர்களில் தங்கள் ஆடலாலும் பாடலாலும் சிறந்து நின்ற ந்த மக்கள் கலைஞர்களே, மன்னர்களும் ஏத்திப்போற்றி புரந்த வரலாற்று ஏடுகளிலும் உள்ளன. காளையார் கோவில் தளி இலாராகிய நக்கன் செய்யாளான காளிங்கராய தலைக்கோலி யைப் பாராட்டி மாறவர்மன் குலசேகரபாண்டியன் பல நிலக்கொடை வழங்கியுள்ளதை காளை யார் கோவில் கல்வெட்டு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மன்னர்களில் திருமலை சேதுபதி, திருச்சுழியல் கலியாணி என்ற தேவரடியார், திரு விழாவொன்றிலே சிறப்பாக வேடங்கட்டி ஆடியதற் காக பாறைக்குளம் என்ற கிராமத்தில் நிலக் கொடை வழங்கிய செய்தி செப்பேட்டில் உள்ளது. இதனைப்போன்று திருச்சுழியல், நந்த கோபாலம் என்பவருக்கு மூன்றடைப்பு என்ற கிராமத்திலும். முத்தாள் என்பவருக்கு கலியாண சுந்தரபுரத்திலும் நிலக் கொடை வழங்கியுள்ளார். மேலும் அதே மன்னர் அருப்புக்கோட்டை வாழ வந்த அம்மன் கோவில் நாதசுரக்கலைஞர்,கருப்பனுக்கு