பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 i

அருப்புக்கோட்டையிலும், நட்டுவக் கலைஞர்கள் சூரிய நாராயணனுக்கும், சின்னக்காளேக்கும் புளிப் பட்டி, கஞ்சநாயக்கன் பட்டி ஆகிய கிராமங்களிலும் நிலக்கொடை வழங்கி சிறப்பித்துள்ளார். அவரையடுத்து ஆட்சிக்கு வந்த முத்துக்குமார விஜய ரகுநாத சேதுபதி திருவாடானையில் முத்தாள் என்ற தேவரடியார்க்கும் முத்து விஜயரங்க சொக்கநாத மன்னர் சிறை மீட்டாள் பொன்னி ஆகியோர்க்கு பாளையம் பட்டியிலும் நிலங்கள் வழங்கி ஆதரித் துள்ளதை அவர்களது செப்பேடுகளில இருந்து தெரிய வருகின்றது. பிற்காலத்தில் ஆடலும், பாடலும் மிக்க ஆடல் குட்டியர் குழு சின்னமேளம் என்றும் அவர்களில் ண்பாலரான நாயனக்குழலும் மேளமும், ஒத்தும் இணைந்த கலேக்குழு பெரியமேளம் என்றும் வழங்கப் பட்டன. தற்பொழுது இவர்கள் அரசுப்பதிவுகளில் இசை வேளாளர் என குறிப்பிடப்படுகின்றனர். இன்றும் ஆலேயங்களில் சுவாமி பள்ளியெழுச்சி, புறப்பாடு, திருக்கண் அமருதல், உலா போன்ற வழிபாடு முறைகள் அனைத்திற்கும் இவர்கள் இன்றி யமையாதவர்களாக இருந்து வருகின்றனர். - - --- Ο வேளாளர் வெள்ளத்தை ஆள்பவர் என்ற காரணத்தில்ை எழுந்த பெயர் வேளாளர். இது மாவட்டத்தில் பரவலாக வாழ்ந்து வரும் இந்தச் சமூகத்தினர் பெரும்பாலும் விவசாயிகள் இவர்களில் பிரதான பிரிவுகள்-ப்ாண்டி வேளாளர், கொடிக்கால் வேளா ளர், அரும்பு குத்தி வேளாளர், செம்பி நாட்டு