பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 - ககன் வேளாளர், குறும்பு வேளாளர், மலைக்குத்தி வேளா ளர், என்பன. வைதீக இந்து சமயத்தைப் பின் பற்றும் இவர்கள் தங்களைப் பிள்ளை', 'முதலி' என்றும் அழைத்துக் கொள்கின்றனர். இவர்களில் செம்பி நாட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் கணக்கர்களாகப் பணியாற்றி வந்த வர்கள். சேது நாட்டு அரசியலில் தீவிர மாற்றங் களைப் புகுத்திய விஜயரகுநாத சேதுபதி காத்த தேவர் இந்த சமூகத்தினரை, மதுரை ச் சீமையில் இருந்து வரவழைத்து தமது அரசுப் பணியில் அமர்த்திக் கொண்டார். அது முதல் பல ஆண்டுகள் பட்டோலே எழுதுவதில் இருந்து படைத் தலைமை நடத்தும் பணிவரை பல நிலைகளிலும் சேது நாட்டு அரசியலில் இந்த சமூகத்தினர் சிறப்பான சேவை செய்துள்ளனர். சேதுபதிகளின் தளவாயாகவும், பிரதானியாகவும் பல ஆண்டுகள் பணியாற்றி பெரும் புகழ் படைத்தவர்கள், சங்கரநாராயண பிள்ளை, தாமோதரம் பிள்ளை, முத்துஇருளப்பபிள்ளை ஆகியோராவர். அடுத்து கிழக்கு இந்திய கும்பெனி யார் ஆட்சிக் காலத்தில் வருவாய்த் துறைக்கு வலி வுற்ற அங்கமாகத் திகழ்ந்தவர்களும் இந்த சமூகத் தினர்கள். கிராமங்களில் பயிரிடப்படும் பயிர்கள் அவற்றிலிருந்து எதிர்பார்க்கப் படுகிற மகசூல், அதில் வரியாக அரசு பெற வேண்டிய பங்கு அல்லது தொகை ஆகியவற்றை நிகுதி செய்து கனக்குகளைப் பராமரிக்கும் பணியாளர்களாக இவர்கள் இருந்து வந்தனர். - இத்தகைய பணி சேதுபதி மன்னர்களது ஆட்சியில் காரான் அம்பலம், காட்டுஅம்பலம் என்றும் பின்னர் கர்ணிகர் அல்லது கர்ணம் எனவும் வழங்கப்பட்டது. இந்தப் பணிக்கான ஊதியம் அவர்களுக்குக் களத்து மேட்டில் அறுவடையின் பொழுது நெல்லாக வழங் கப்பட்டு வந்தது. ಫ್ಲಿ. அரசுப் பணியில் மட்டும் அல்லாமல் இலக்கிய உலகிலும்மிகச் கிறப்பானதொரு இடத்தை எய்தியுள்ளனர். இராமநாதபுரம் சோமசுந்தர குருக்கள், முதுகுளத்துார் சதாவதானம் சரவணப்