பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/207

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


194


solo of

வாழும் மனித குலம் அனைத்தையும் சமரச சமத்துவ அணிக்கு அழைத்தார். இத்தகைய சான் ருேர் வாழ்ந்து மறைந்த இந்த மாவட்ட மண்ணில். தன்ஞ்ேடொத்த மனிதனை தன்னை விட இழிந்தவகை, தாழ்ந்தவனக், மதித்த அநாகரிக காலம் ஒன்றும் இருந்தது என்பதை வரலாறு காட்டுகிறது. தமிழ்ச்சமுதாயத்தில் ஆரிய சமயமும், வாழ்க்கை நெறிகளும் ஊடுருவி, ம்னிதர்களிடைய நால்வகைப் பகுப்புகள் நிலைகொண் டமையே இதற்குக்காரண மாகும், கல்வி, பொருளாதார தரங்களில் மிகுந்தவர் அவைகளில் பிற்பட்ட வருக்கு பணிந்து வணங்கி ஊழியம் செய்யும் ஆண்டான் அடிமைநிலை உருவாகி நடைமுறைக்கு வந்தது பெரிய புராணத்து நந்தகு ரும் தேவாரம்பாடிய சுந்தரரும், இத்தகையதொரு இழிந்த சமுதாயத்தைச் சுட்டும் வரலாற்று வரம்பு கிள்ாக உள்ள்னர் என்பதை யாவரும் அறிவர். இந்தநிலை, இந்த மாவட்டத்திலும் பன்னிரண்டாம் நிர்ற்ருன் டில் நிலவியது என்பதை ஆனந்துாரில் உள்ள் கல்வெட்டுச் செய்தியில் இருந்து தெரிய வருகிறது. அந்தச் செய்தியின் படி, ஆந்த ஊரில் உள்ள திருமதிச் சடை நாயனர் கோயில் ரீருத்தி ர மாகேசுர ருக்கும் சீகாரியம் செய்வார்களுக்கும் அரும் பொற் கூற்றத்து நல்லூரில் உள்ள நால்வர், அந்த ஆலயத்து திருக்காமக் கோட்ட நாச்சியார் திருப்பன்ரிக்கு, இடைக்குடி மக்கள் சிலரை விற்றனர் அந்த அடிமைகளுக்கான விலைப் பிரமானத்தை திருத்தேர்வளையைச் சேர்ந்த வண்ணக்குச் செட்டி யார் என்பவர் வழங்கினர். மற்ருெரு செய்தி, கி. பி. 1657-இல் நிலவிய கடுமை பiான பஞ்சத்தின் பொழுது, திருவாடானை வட்டத் தில் உள்ள சிற்றுாரில் உள்ள மறக்குடி மகன் ஒருவர் தமது அருமைப்புதல்வனே சிறிது பொருளுக்குப் பகரமாக விற்று விடுகிருர். சில ஆண்டுகளுக்குப் பின்னர் அந்தப் பகுதி பாளையக்காரர் ஒருவரது தீராத வியாதியை தீர்த்து வைத்ததற்குப் பரிசாக தனது அருமை மகனை அடிமைத் தளையினின்றும்