பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சோழர்களது வலுவான ஆட்சி நடைபெற்றதற்கு வரலாற்றுச் சான்றுகளாக உள்ளன. கி. பி. 1218-ல் குலோத்துங்க சோழனது வீழ்ச்சி, பாண்டியர்களது இரண்டாவது பேரரசின் எழுச்சியைக் காட்டியது. பாண்டியநாடு பழம் பெருமையை எய்தியதுடன் பாண்டிய நாட்டின் எல்லைகள் வடக்கே சோழநாட்டை யும் வடுக நாட்டையும், தெற்கே ஈழநாட்டையும்

ேம ற் .ே க வேளுநாட்டையும் உள்ளடக்கியதாக விரிந்தன.

சோழர்கால ஆட்சியின் விளைவாக எழுந்த சிற்றுார்கள் சோழர்கள் பெயரால் நிலைப்பெற்று இன்றும் வழக்கில் இருந்து வருகின்றன. குறிப்பாக, சோழவந்தான் (சிவகங்கைவட்டம்) சோழந்துார் (திருவாடனைவட்டம்) சோழபுரம் (ராஜப்ாளையம் வ ட் ட ம், சிவகங்கை ைட் - ம்) சோழன்குளம் (மாளுமதுரை வட்டம் இராமேஸ்வரம் வட்டம்) சோழமுடி, சோ ழ க், கோட்டை (சிவகங்கை வட்டம்) சோழப்பெரியான். சோழியக்குடி (திருவாடனை வட்டம்) சோழகன்பட்டி (திருப்புத்துார் வட்டம்) ஆகியவை அந்த சிற்றுார் களிலும், இராமநாதபுரம் வடக்கில் உள்ள தேவிப் பட்டினம் ராஜராஜ சோழனது இல்லக்கிழத்தியான லோகமகா தேவியின் நினைவாக அமைக்கப்பட்ட ஊராகும். உலகமகா தேவிப்பட்டினம் என்பது தான் நாள்டையில் வழக்கில், ப கு தி மறைந்து தேவிப் பட்டினம் என வழங்கி வருகிறது. இதைத் தவிர சோழர்களது வெற்றிப் பெயர்களான க ங் ைக கொண்டான் (பரமக்குடி வட்டம்) கிடாரம் கொண் டான் (முகவை வட்டம்) வீரசோழன் (அருப்புக் கோட்டை) கோதண்டராமன் பட்டணம் (மு து குளத்துார் வட்டம்) செம்பியக்குடி (பரமக்குடி, முது குளத்துார், திருவாடனை வட்டம்) ஆகியவை ஊர்களின்