பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/212

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


* 199 _க -- - மடைந்து நமது மாவட்ட கிழக்குக் கடற்கரையில் கரையேறினர். கி. பி. 1344 இல் அப்பொழுது மது ரையில் அரசராக இருந்த தமது உறவினரான சுல் தான் கியாஸுதின் தமகானியைச் சந்தித்துவிட்டு ம்ாலத்தீவுப் பயணத்தைத் தொடர்வதற்கு பெரிய பட்டின்த்தில் மூன்று மாதங்கள் தங்கி காத்து இருந் தார். அப்பொழுது அங்குள்ள அழகிய துறைமுக அமைப்பு, அந்தப் பட்டினத்தில் மண்வளம், அங்கு எப்பொழுதும் மோன நிலையில் உள்ள இசுலாமிய ஞானி, அவரது சீடர்கள் அவர்களில் ஒருவர் புள்ளி மான் ஒன்றையும், இன்னெருவர் சிங்கக் குறளே யொன்றையும் வளர்த்து வந்தது. அந்த மிருகங்கள் இரண்டும் அன்போடு இயைந்து வாழ்ந்து வந்தது பான்ற நிகழ்ச்சிகளை தமது பயண்க் குறிப்பில் பது தா பதிவு செய்து இருக்கிரு.ர். சிரியா நாட்டு ஆசிரியரான திமிஸ்கி என்பவர் கி. பி. 1325 இல் நமது மாவட்டத்திற்கு வந்து சென்ருர், அவர் விட்டுச் சென்றுள்ள குறிப்புகளில் கடற்கரைப் பட்டினமான தொண்டியும், உள்நாட்டுப் பட்டன மாகிய காளையார் கோவிலும் இடம் பெற்றுள்ளன. இவை இரண்டும் மாபார் பகுதியில் உள்ள பிரதான நகரங்களாக வரைந்துள்ளார். அவர் அரபு மொழியில் குறிப்பிட்டுள்ள இன்னும் சில நகரங்கள் எவை என்பதை நிர்ணயம் செய்ய முடியாமல் உள்ளது. இந்த வரலாற்று ஆசிரியர்களைத் தவிர, கிறிஸ்துவ சமயப் பணிக்கென மேலை நாடுகளில் இருந்து வந்த பாதிரியார்களும் இந்த மாவட்டத்தில் தாங்கள் நேரில் கண்டவைகளைத் தங்களது பயணக் குறிப்பு களிலும் கடிதங்களிலும் குறித்துள்ளனர். குறிப்பாக் கி. பி. 1682 இல் நியூஹாப் என்ற பாதிரியார், கீழக் கரை, இராமேஸ்வரம், வேதாளை ஆகிய கடற்றுறை களை குறிப்பிட்டு இருப்பதுடன் மறவர் சீமையின் தலைநகரான பெரிய பட்டினம் இருப்பதாகவும் அங் குள்ள மறக குடியினரை கிறித்துவ சமயச் சான்ருேர் தள்_மிகவும் பிரயாசைப்பட்டு திருத்தியும், விரைவி லேயே தங்களது.முந்தைய தீய தொழில்ான திருட்