பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/218

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS 12) இராஜபாளையம் வட்டத்திலுள்ள சிற்றுார் இளந்திரை கொண்டான், இது ஈழம் திறைகொண் ட்ான் என்ற விருதையுடைய சோழப்பேரரசன் ராஜ ராஜன் அல்லது அவனது மகன் ராஜேந்திரன் ஆகிய இருவரில் ஒருவர் நினைவாக எழுந்த ஊராகும். 13) அய்யனர் சுவாமியின் பெயரால் நாட்டுப்புறங் களில் ஆங்காங்கு ஆலயமும், பரிவார அணிவகுப்பு களும் உண்டு. அவைகளில் ஒன்று பரமக்குடி வட்டம் போகலூர் கிராமத்தில் உள்ளது. அந்த அய்யனர் பெரும்புகழ் கூத்தனர் அய்யனர் என வழங்கப்படு கிறார். அவரது புகழ் நினைவான இந்த ஊர் புகழுர்போகலூர் என ஆகிவிட்டது. 14) இந்த நாளில் இந்த மாவட்டம் முழுவதையும் ஒரே நாளில் காரில் சுற்றி வரக்கூடிய சாலை வசதிகள் உள்ளன. ஆனல் 150 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மாவட்டத்தில் வண்டிகள் செல்லக்கூடிய சாலைகள் மட்டும் எட்டு இருந்தன. 15) இந்த மாவட்டத்தின் பெரும்பரப்பில் அடங்கிய இராமநாதபுரம், சிவகங்கை, சமஸ்தான நிலப்பகுதி களில் ஜமீன் ஒழிப்புச் சட்டம் 1949 இல் அமுலுக்கு வந்த பிறகுதான் நில அளவை செய்யப்பட்டு குடி களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டன. ஆனல் இந்தப்பகுதிகளில் முதன்முறையாக 1814இல் இந்தப் பகுதிகள் நிலஅளவை முறையில் அளக்கப்பட்டன. 16) சிவகங்கைப் பிரதானிகளான மருதுபாண்டியர் கள் தங்களது குறுகிய கால ஆட்சிக்குள் பல திருப் பணிகளைச் செய்து முடித்தனர். அவற்றில் சிறப்பாக குறிப்பிடத்தக்கவை-காளை யார் கோவில் கோபுரம், ஆனைமடு தெப்பக்குளம், குன்றக் குடி மருதாபுரி குளம், ஆலயம், சிவகங்கை சுப்பிரமணியசுவாமி கோயில், மானவீர மதுரைக் கோயில் கோபுரம், திருப்புத்துார் திருத்தனியாண்ட நாயனர் கோயில் ஆயிரங்கால் மண்டபம் ஆகியவையாகும். மருதுபாண்டியர்களைத் தாக்கில் தொங்கவிடுவதற்கு முன்னர் அவர்களது கடைசி ஆசை எதுவும் இருந்