பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/222

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ம தினம் தங் த புனிதர் பன்னிரண்டு பதின் மூன்ருவது நூற்ருண்டுகளில் வாணிப நோக்கில் வந்த அரபிகளது குடியிருப்புகள் , கோட்டைப் பட்டினத்திலிருந்து கீழ்க்கரை வரையி லான கிழக்கு கடற்கரையில் அஞ்சு வண்ணம் என அழைக்கப்பட்டன. இவர்களது அகவாழ்விற்கு உதவுவதற்காக அரபு நாட்டிலிருந்து சமயத்தொண் டர்களும் சான்ருேர்களும் வந்தனர். அவர்களில் சிறப்புடன் குறிப்பிடத்தக்கவர் எபீல்தான் ஷஹீது என வழங்கப்பட்ட சையது இப்ராஹீம் (வலி) ~Q] GUГГё75 GTT. அரபு நாட்டின் தொன்மைமிக்க மதீனத்தில் கி.பி. 1136இல் பிறந்த இந்தப் பெருமகன் வள்ளல் இரசூல் முகம்மது நபிகளது பெண் வழியில் பதினேழாவது தலைமுறையை சார்ந்தவர். சிறந்த ஞானத்தையும் கல்வியையும் கற்று இளம் சித்தராக விளங்கினர். தமது மூதாதையரான முகம்மது நபி அவர்களைப் போன்று தமது வாழ்வை மக்களது பணியில்மக்களது நலிவு தீர்க்கும் நல்ல தொண்டில் நாட்டம் கொண்டவராக வாழ்ந்து வந்தார். அந்த காலத்தில் அரபிகள் வியாபார்த் தொடர்பு கொண்டிருந்த் நமது நாட்டின் சிந்து; குஜராத் மாநிலங்களுக்கு கி. பி. 1197இல் தொண்டர் ச்டிட்டம் ஒன்றில் தலை வராக சென்று வந்தார். பின்னர் மதீனத்திலும் சுற்றுப்புறங்களிலும் சமய பணியில் ஈடுபட்டிருந்த அவர் தமது குடும்பத்தினர் தொண்டர்கள் அடங்கிய குழு ஒன்றுடன் கேரளக்கரை வழியாக பாண்டிய நாட்டுக்கு கி.பி. 1186ல் வந்து சேர்ந்தார். u u su u sa காயல்பட்டினத்திலும், மதுரையிலும் கிடைத்த வரவேற்பு அவருக்கு மறவர் சீமையில் இல்லை. மாருக அப்பொழுது பவித்திர மாணிக்கபட்டினத் தை தலைநகராகக் கொண்டு கிழக்கு இராமநாதபுரம் பகுதியை ஆட்சி செய்த விக்கிரம பாண்டியன் செய்யது இப்ராஹிம் குழுவிற்கு பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தினன் தாங்கள் சார்ந்துள்ள புதிய சமய