பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 15

இளைஞன் சொக்கலிங்கத்தின் இதயத்தில் புரட்சி எண்ணங்கள் பூத்துக் குலுங்கின. முதலில் தம் முடைய தன வைசிய சமூகத்தை அவற்றை நடை முறைப்படுத் து:ம் களமாகப் பயன்படுத்தினர். பழ மையின் பெயரால், சமயத்தின் பெயரால் பின்னிப் படர்ந்துள்ள சிறுமைகளைக்களேந்து கட்ட முயன் ருர். தமது அருமைத் தோழர் சொ. முருகப்பாவுட்ன் இணைந்து காரைக்குடியில் தன வைசிய ஊழியர் சங்கம் ஒன்றைத் துவக்கினர். துடிப்பும் துணிவும் மிக்க தொண்டா படை இணைந்தது. அதனது ஆக்க மாக இன்றும் காரைக்குடியில் செயல்பட்டு வரும். இந்து மத அபிமான சங்கம் கி. பி. 1917ல் தோன்றி யது. இந்தச் சங்கத்தை மகாகவி பாரதியார் கி. பி. 1919 இல் குலம் உயர், நகர் உயர, நாடு உயர உழைக் கின் ருர்_கோடி நன்மைநிலவுற' என வாழ்த்தியருளி ர்ை. இந்த சங்கத்தின் சிம்மநாதமாக தன்வைசிய்ன் ஊழியன் என்ற இரு திங்கள் இதழ்கள் வெளிவந்தன அவைகளின்_ முழக்கம் செட்டி நாட்டில் இருபது ஆண்டுகள் இடைவிடாது எதிரொலித்தன. இத்சலுத்த்தில் காந்தியடிகள் தலைமையிலான தசிய இயக்கமும் அதனுடைய செயல்பாடுகளும் சொக்கலிங்கத்தைக் கவர்ந்து ட்கொண்டன. ஆதன் பரிசாக 1932ல் ஒராண்டுகால சிறைத்தண்டனை கிட்டியது. அரசியல் காரணத்திற்காக சிறை சென்ற செட்டி நாட்டு முதல் குடிமகன் தொடர்த்து தேசிய இயக்கங்களில் தீவிரமாகப் பங்கு கொண்டார். காந்தியடிகள் செட்டி நாட்டில் சுற்றுப்பயணம் வந்த பொழுது செட்டிநாட்டுராஜா அண்ணுமலைச்செட்டி யார் போன்ற ஆங்கில அடிவருடிகள் எல்லாவித எதிர்ப்புகளையும் அடிகளாருக்கு ஏற்படுத்தியும் அஞ் சாது அவரைத் தமது அமராவதி புதுார் இல்லத்தில் தங்க வைத்து அகமகிழ்ந்தார். பின்னர் இராமநாத புரம் மாவட்டம் காங்கிரஸ் அமைப்புத் தலைவர், காரைக்குடி நகராட்சி தலைவர் பதவிகளில் இருந்து பலவகையிலும் தொண்டாற்றினர். காரைக்குடியில் நிர்மாணிக்கப்பட்ட காந்திமாளிகை என்ற நகராட்சி