பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 _ - - -- - _ இவர் பல பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகள் எழுவ தற்கு எண்ணற்ற செல்வத்தை வாரி வழங்குகிஞர். தாம் அமைந்த காரைக்குடி கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் இணைத்து பல்கலைக் கழக மொன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். கோடி கொடுத்த இந்தக் கொடையாளியின் முயற்சி நிற்ை வேறு முன்னர் காலன் அவரைக் கவர்ந்து சென்று விட்டான். பாரியின் மரபுவந்த வள்ளல் அழகப்பரின் நினைவு கல்வி உலகு உள்ளளவும் நிலைத்து நிற்கும். O

இறைவழியினே-பரத்துவ, ஏகத்துவ கருத்துக்களே எளிய தமிழில் பாமரர்களும் புரிந்து பயனுறும் வண் ணம் பரப்பியவர்கள் பதினெண் சித்தர்கள். பக்தி இலக்கியத்தை பாமர லக்கியமாக வடித்துக் கொடுத்தவர்கள் அந்தச் சித்தர்களே. அவர்களின் வழிநின்று வாழ்ந்தவர்தான் பதினேழாம் நூற்ருண் டைச் சேர்ந்த தாயுமான அடிகள். தஞ்சைத் தரணி தந்த இந்த வள்ளல், இளமையிலே ஞான மார்க்கத்தில் ஈடுபடுத்திக் கொண்டார். விரைவில் இல்லறத்தைத் துறந்து துறவுநிலை மேற் கொண்டார். அந்த நிலையிலே அறிவினுக்கு அறிவாகி ஆனந்தமயமான ஆதியைக் காண முனைந்தார். யாதினும் வல்லவொரு சித்தாகி என்றைக்கும் உள் ளது எது? அங்கும் இங்கும் எங்கும் ஆனந்த பூர்த்தி யாகி அருளொடு நிறைந்தது எது? என்பன போன்ற விளுக்களுக்கு விடையும் விண்டு கண்டார். பார்க்கும் இட்ம் எல்லாம் நீக்கமற நிறைகின்ற சித்தமிசை குடி