பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 இன்று, அவற்றின் பெரும் பகுதி காலத்தின் சீரழிவிற்கு இலக்காகி இருந்தாலும் ஒரு பகுதி இரு நூற்று ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் ஏற்றமிகு எழிலுடன் காட்சியளிக்கின்றன. மேற்குறிப்பிட்ட ஓவியங்களோடு மன்னரது மகுடாபிஷேகம், மனங்க வரும் களியாட் டங்கள், அந்தப்புர கேளிக்கைகள், திறையளிக்கும் காட்சிகள், போன்ற பல ஒவியங்கள் வண்ணக் கலவை யில் வழங்கப் பட்டுள்ளன. கிழவன் சேதுபதியும் அவரையடுத்து அரியணை ஏறிய விஜய ரகுநாத சேதுபதியும் (1710-20) கு மார முத்து விஜய ரகுநாத சேதுபதியும் கொண்டிருந்த கலை உள்ளந்தான் இராமலிங்க விலாசம் கலைப் பேழை யாக காட்சியளிக்கக் காரணமாக இருந்துள்ளது. இம்மாளிகை, கலைக்கூடமாக மட்டுமல்லாது, கலைஞர் களும், புலவர்களும் தங்களது தன்னேரில்லாத திறனுக்குத் தக்க பரிசில் பெறும் முத் திரைக் கூடமாக வு ம் வி ள ங் கி வந்துள்ளது. அட்டாவதானம், சதாவதானம், சரவணப் பெருமாள் கவிராயர்கள், மீர் சவ்வாது கவிராயர், மீனட்சி சுந்தரம் பிள்ளை, வித்வான் ரா. ராகவ ஐயங்கார், மகோபாத்யாய உ . வே . சாமினதைய்யர் , சி ேல ைட ப் பு லி பிச்சுவையர், சூரியநாராயண சாஸ்திரியார், (பரிதி மாற் கலைஞர்) போன்ற மிகப்பெரும் புலவர்களும், பட்டணம் சுப்பிரமணிய ஐயர், மகாவைத்யநாத ஐயர், மைசூர் சேஷண்ணு, பூச்சி பூரீநிவாச ஐயங்கார், வீணை தனம்மாள், வயலின் செளடய்யா போன்ற கலை மேதைகளும் தங்கள் கலை வண்ணத்தைக் காட்டி, பரிசிலும் பெருமையும் பெற்ற ஒப்பற்ற இடந்தான் இம்மாளிகை. o மற்றுமொரு சிறப்பான செய்தியும் இதனோடு தொடர்பு கொண்டுள்ளது. பதினெட்டாம் நூற்ருண்டின் பிற்