பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I 6 இந்த ஆலயத்தின் அன்ருடக் கட்டளைகள் முதல் ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாக்கள் வரை, முறையாக காலமெல்லாம் நடந்தேற, அணியும் மணியும், பொன்னும் பொருளும் அள்ளி அள்ளி வழங்கியதுடன், ஐம்பத்து ஏழு ஊர்களையும் சர்வமான்ய மாக வழங்கினர்கள். கடல் நடுவில் அமைந்துள்ள இராமேஸ்வரம் தீவில் காலத்தையும் கற்பனையையும் கடந்து நிற்கு ம் கட்டுமானங்களை இந்த ஆலயத்தில் அமைத்து, உலக அதிசயங்களில் ஒன்ருக மூன்ரும் பிரகாரத்தையும் அமைத்துள்ளனர். கோயிலின் கருவறையை ஒட்டிய வாறு இரண்டு சுற்ருல மண்டபங்கள் இருந்தாலும், இந்த ஆலயத்தின் கட்டுமானங்கள் அனைத்தையும், உள்ளடக்கியவாறு, கட்டுமானத்திற்கு முத்தாய்ப்பாக விளங்குவது மூன்ரும் பிரகாரம்தான். இக்கோவிலின் பெரும் பகுதி 12-16 ஆம் நூற்ருண்டுகளில் கட்டப் பட்டது. கி. பி. 1414 வாக்கில் இராமேஸ்வரம் திருக் கோயிலில் உடையான் சேதுபதியின் ஆலயத்திருப்பணி துவங்கியது. இதன் கற்கள் இலங்கையிலுள்ள திரி கோணமலை என்ற இடத்தில் உருவாக்கிக் கொண்டு வரப்பட்டன என்று கூறப்படுகிறது. = கிழமேலாக 695 அடி நீளமும், தென்வடலாக 450 அடி நீளமும் கொண்ட சதுரவடிவில் 1740 அழகான கற்றுாண்கள் நிறுத்தி, அழகு சேர்க்கப்பட்டுள்ளது இந்த மூன்ரும் பிரகாரம். இந்தப் பிரகாரத்தின் ஒர் இடத்திலிருந்து மற்ருெரு மூலையைப் பார்க்கும் பொழுது, அந்த இடம் கண்ணுடிச் சட்டத்திற்குள் பொருத்தப்பட்டுள்ள சித்திரம் போன்று. ஒரேஅளவுள், ளதாகவும், அழகாகவும் காட்சியளிக்கும் தோற்றத்தில் அமைநதுளளது. *